விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மல்கு நீர்க் கண்ணொடு*  மையல் உற்ற மனத்தினளாய்,* 
    அல்லும் நன் பகலும்*  நெடுமால் என்று அழைத்து இனிப்போய்,* 
    செல்வம் மல்கி அவன் கிடந்த*  திருக்கோளுர்க்கே,* 
    ஒல்கி ஒல்கி நடந்து*  எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மல்கு நீர் கண்ணொடு - (என் மகளானவள்) நீர் நிரம்பிய கண்களையுடையவளாயும்
மையல் உற்ற மனத்தனள் ஆய் - வியாமோஹம் கொண்ட நெஞ்சையுடையளாயும்
நல் அல்லும் பகலும் -நல்ல இரவிலும் பகலிலும் (தவறாது)
நெடு மால் என்று அழைத்து - ஸர்வேச்வரனே! என்று கூப்பிட்டுக்கொண்டிருந்து,
இனி - இப்போது

விளக்க உரை

என்னுடைய இளமான், பெருகுகின்ற தண்ணீரையுடைய கண்களோடு மயக்கம் பொருந்திய மனத்தினையுடையவளாகி நல்ல இரவும் நல்ல பகலும் நெடுமால் என்று அழைத்துக்கொண்டு, அதற்குமேல், செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கு, வருந்தித் தளர்ந்து நடந்து சென்று எங்ஙனே புகுவாள் என்க.

English Translation

With overflowing teas and longing heart, night and day she would call, "Ancient Lord!" Now she has gone to Tirukkolur where her Lord lives amid riches. Alas, I wonder how she would have reached, with trailing steps and a shrivelled frame!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்