விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்று எனக்கு உதவாது அகன்ற*  இளமான் இனிப்போய்,* 
    தென் திசைத் திலதம் அனைய*  திருக்கோளூர்க்கே 
    சென்று,*  தன் திருமால் திருக்கண்ணும்*  செவ்வாயும் கண்டு,* 
    நின்று நின்று நையும்*  நெடும் கண்கள் பனி மல்கவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எனக்கு - தன்னைப்பிரிந்து நோவுபட்டுக் நடக்கிற எனக்கு
இன்று - இப்போது
உதவாது அகன்ற - உசாத்துணையாக இராதே கைகழித்துபோன
இள மான் - இளமான்போன்ற என்மகள்
போய் - வருந்தி வழிநடந்து போய்

விளக்க உரை

இன்றையதினத்தில் எனக்கு உதவாமல் நீங்கிய என்மகளானவள், இதற்குமேல் சென்று தென்திசைக்குத் திலதத்தைப் போன்று விளங்குகின்ற திருக்கோளூர் என்னும் திவ்வியதேசத்தை அடைந்து, தன் திருமாலினுடைய திருக்கண்களையும் சிவந்த திருவாயினையும் கண்டு, நீண்ட தனது கண்களில் தண்ணீர் நிறையும்படியாக நின்றுநின்று வருந்தாநிற்பாள்.

English Translation

My little fawn is of no use to me anymore. She has left me and gone to Tirukkolur where her Lord stands as a Tilaka to the South, Would she be standing in a swoon, -with tears in her eyes, -waiting to see her Lord's auspicious red eyes and lips?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்