விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்*  என் சிறுத்- 
    தேவிபோய்,*  இனித்தன் திருமால்*  திருக்கோளூரில்,*
    பூ இயல் பொழிலும்*  தடமும் அவன் கோயிலும் கண்டு,* 
    ஆவி உள் குளிர*  எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏன் சிறு தேவி - வயதுமுதிராதவளும் திவ்யஸ்வபாவ முடையவளுமான என் மகள்
மேவி - பகவந் குணங்களிலே யீடுபட்டு
நைந்து நைந்து - மிகவும் இளைத்து
விளையாடல் உறாள் - (தன் வயதுக்குரிய) விளையாட்டிலும பொருந்தாதவளாய்
போய் - இங்கு நின்றும் போய்

விளக்க உரை

என்னுடைய இளமைபொருந்திய பெண்ணானவள், அவனை மனத்தாலே அடைந்து அதனாலே மனமும் சரீரமும் உருகக் குலைந்து விளையாடுதலைச் செய்யாள்; இனிச் சென்று, தனது திருமால் எழுந்தருளியிருக்கின்ற திருக்கோளூர் என்னும் திவ்விய தேசத்தில் இருக்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளையும் குளங்களையும் அவனுடைய கோயிலையும் உயிர் குளிரும்படியாகக் கண்டு இன்று எப்படி மகிழ்கின்றாளோ?

English Translation

My little goddess gave up her toys and faded day by day. Now she is with her beloved Lord inTirukkolur amid flower gardens, water tanks and in his temple. I wonder how she enjoys herself today!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்