விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூவை பைங்கிளிகள்*  பந்து தூதை பூம் புட்டில்கள்,* 
    யாவையும் திருமால்*  திருநாமங்களே கூவி எழும்,*  என் 
    பாவை போய் இனித்*  தண் பழனத் திருக்கோளூர்க்கே,* 
    கோவை வாய் துடிப்ப*  மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பை கிளிகள் - பசுமைதங்கிய கிளிகளென்ன
பந்து - பந்துகளென்ன
தூதை - சிறுசோறுசமைக்கும் பானைகளென்ன
பூ புட்டில்கள் - பூவிடும் குடலைகளென்ன ஆகிய (லீலோபகரணங்களான)
யாவையும் - இவையெல்லாவற்றாலும் உண்டாகக்கூடிய இன்பம்

விளக்க உரை

பூவையும் பசிய கிளிகளும் பந்தும் தூதையும் அழகிய பூக்கூடையுமாகிய இவை எல்லாவற்றாலும் உண்டாகும் இன்ப முழுதும் திருமால் திருநாமங்களைச் சொல்லுவதனாலே உண்டாகும்படி அவன் திருநாமங்களைச் சொல்லி அதனாலே வாழ்வு பெறுகின்ற என் மகள், குளிர்ந்த வயல்களையுடைய திருக்கோளூர்க்கு இனிச் சென்று, கோவைக்கனி போன்ற வாய் துடிக்கும்படி தண்ணீர் நிறைந்த கண்களோடு நின்று என்ன செய்கிறாளோ? என்கிறாள்.

English Translation

Her mynahs, her parrots, her ball, her toys, and flowers boxes were all the 'the Lord' for her, -she used to call them by his names, Alas! My doll is now in fertile Tirukkolur itself. With raining eyes and twitching lips, what would she be doing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்