விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊரும் நாடும் உலகமும்*  தன்னைப்போல் அவனுடைய* 
    பேரும் தார்களுமே பிதற்ற*  கற்பு வான் இடறி,* 
    சேரும் நல் வளம்சேர்*  பழனத் திருக்கோளூர்க்கே,* 
    போரும் கொல் உரையீர்*  கொடியேன் கொடி பூவைகளே!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூவைகளே - பூவைப்பறவைகளே!
ஊரும் நாடும் உலகமும் - தானிருந்த ஊரும் நாடும் உலகமுமெல்லாம்
தன்னைபோல் - தன்னைப்போலவே
அவனுடைய - எம்பெருமானுடைய
பேரும் தார்களுமே பிதற்ற - திருநாமங்களையும் சின்னங்களையுமே பிதற்றும்படி (செய்யுமவளான)

விளக்க உரை

 ஊரிலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களும் உலகத்திலுள்ளவர்களும், தன்னைப்போலவே, அவனுடைய திருப்பெயர்களையும் திருமாலைகளையும் பிதற்றும்படியாக, சிறந்த கற்பினையும் காற்கடைக்கொண்டு, நல்ல வளப்பங்கள் சேர்ந்திருக்கின்ற வயல்களையுடைய திருக்கோளூர் என்னும் திவ்வியதேசத்திற்குச் சென்று சேர்கின்ற, கொடியேனுடைய பூங்கொடி போன்ற என்மகளானவள் மீண்டு வருவாளோ? சொல்லுங்கோள் என்கிறாள்.

English Translation

Throwing her grace to the winds, -like herself, making the town and country prate his names and symbols, -my tender fawn must have reached Tirukkolur of fertile fields, Alas, hapless me Tell me. O Mynahs! Will she return?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்