விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆனாயர்கூடி*  அமைத்தவிழவை*  அமரர்தம்- 
    கோனார்க்கொழியக்*  கோவர்த்தனத்துச்செய்தான்மலை*
    வான்நாட்டினின்று*  மாமலர்க்கற்பகத்தொத்துஇழி* 
    தேனாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வான் நாட்டில் - ஸ்வர்க்கலோகத்திலுள்ள
மா மலர் - பெரிய பூக்களையுடைய
கற்பகம் - கல்பவ்ருக்ஷத்தினுடைய
தொத்தில் நின்று - பூங்கொத்தில் நின்றும்
இழி - பெருகாநின்ற

விளக்க உரை

முன்னடிகளிற் கூறப்பட்ட வரலாறு கீழ்ப் பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டமை காண்க. தன் அபிமானத் திலகப்பட்ட அவ்விடையர்களை அந்யசேஷத்தில் நின்றும் மீட்டு மலைக்குச் சேஷமாக்கி யருளியவாறு போல, இங்கும் ஸகல சேகநர்களையும் திருமலையாழ்வார்க்குச் சேஷமாக்குகைக்காக எம்பெருமானெழுந்தருளி யிருக்கின்றனன் என்ற கருத்துத் தோன்றும் இவ்வரலாற்றை இங்குக் கூறியதனால். செய்தான்- ஆறாம் வேற்றுமைத் தொகை. தேவலோகத்துள்ள கல்பவ்ருக்ஷத்திற் பூங்கொத்துக்களினின்று பெருகின மது தாரைகளானவை, திருமாலிருஞ் சோலைமலையில் வோடாநின்றின வென்பது- பின்னடிவகளின் கருத்து. இதனால் அம்மலையினது மிக்க உயர்ச்சியைக் கூறியவாறாம்

English Translation

The nectar spraying from the bunches of Kalpaka flowers that grow in heaven gather into a stream and flows down the Malirumsolai hill as Nupura Ganga. The hill belongs to the Lord who diverted the cowherd clan’s festive offerings from Indra to Govardhana.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்