விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உண்ணும் சோறு பருகும்நீர்*  தின்னும் வெற்றிலையும் எல்லாம் 
    கண்ணன்,*  எம்பெருமான் என்று என்றே*  கண்கள் நீர்மல்கி,* 
    மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,* 
    திண்ணம் என் இளமான் புகும் ஊர்*  திருக்கோளூரே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உண்ணும் சோறு - உண்டு பசீதீர்க்க வேண்டும் படியானசோறும்
பருகும் நீர் - குடித்து விடாய் தீர்க்க வேண்டும் படியான நீரும்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் - தின்று களிக்கவேண்டும்படியான வெற்றிலையுமாகிய எல்லாப்பொருள்களும்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே - (எனக்கு) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே யென்றுபலகாலும் சொல்லி
கண்கள் நீர்கள் மல்கி - கண்ணீர தாரைதாரையாகப் பெருகப்பெற்றிருந்த

விளக்க உரை

உண்ணுகின்ற சோறும் குடிக்கின்ற தண்ணீரும் தின்னுகின்ற வெற்றிலையும் எல்லாம் கண்ணனாகிய எம்பெருமான் என்று என்றே கண்கள் நீராலே நிறைய, பூமியிலே அவனுடைய கல்யாண குணங்களையும் வளத்தால் மிக்கவனான எம்பெருமானுடைய திவ்விய தேசத்தையும் கேட்டுக் கொண்டு, என்னுடைய இளமான் புகும் ஊர் திருக்கோளூர் என்னும் திவ்விய தேசமேயாகும். இது நிச்சயம்.

English Translation

With tears in her eyes my tender fawn would say; "My food, drink and the Betel I chew, are all my Krishna", I am sure she has found her way to Tirukkolur, enquiring about his town of fame and fortune on Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்