விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாண்பு அமை கோலத்து*  எம் மாயக் குறளற்கு,* 
    சேண் சுடர்க் குன்று அன்ன*  செஞ்சுடர் மூர்த்திக்கு,* 
    காண் பெரும் தோற்றத்து*  எம் காகுத்த நம்பிக்கு,*  என் 
    பூண் புனை மென்முலை*  தோற்றது பொற்பே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாண்பு அமை கோலத்து - அழகமைந்த வடிவையுடையனான
எம் மாயம் குறளற்கு - எம்மையீடுபடுத்திக்கொள்ளும் மாயவாமனமூர்த்தியும்
சேண் சுடர் குன்று அன்ன - உயர்ந்த சோதிமயமான குன்று போன்ற
செம் சுடர் மூர்த்திக்கு -செவ்விய சுடரையுடைய வடிவு கொண்டவனும்
காண் பெருதோற்றத்து - அனைத்துலகும் காணப்பர்வத்தையுடைய

 

விளக்க உரை

அழகுபொருந்திய வடிவத்தையும் வஞ்சனையையுமுடைய வாமனனாக அவதரித்தவனுக்கு, உயர்ந்த பிரகாசம்பொருந்திய மலைபோன்ற சிவந்த ஒளியையுடைய திருமேனியையுடையவனுக்கு, காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய ஸ்ரீராம்பிரானுக்கு என்னுடைய, ஆபரணங்களைத் தரித்த மெல்லிய முலைகளையுடைய பெண்ணானவள் அழகினைத் தோற்றாள்.

English Translation

My soft-breasted jewel-girl has lost her radiance, -to the Lord who came as beautiful groom, the Kakutsha Lord who looks a perfect hero, and rises tall like a dark radiant mountain.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்