விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சாயக் குருந்தம் ஒசித்த*  தமியற்கு,* 
    மாயச் சகடம் உதைத்த*  மணாளற்கு,* 
    பேயைப் பிணம்படப்*  பால் உண் பிரானுக்கு,*  என் 
    வாசக் குழலி*  இழந்தது மாண்பே . 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குருந்தம் சாய ஒசித்த தமிபற்கு - குருந்தமரம் வேரோடுபறியுண்டு சாயும்படி அதனை முறித்த அத்விதீயனும்
மாயம் சகடம் உதைத்த மணாளற்கு - க்ருத்ரிம்மான (அஸுராவேசங்கொண்ட) சகடத்தைப் பொடிபடுத்தின மணவாளனும்
பேயை பிணம் படபால் உண்பிரானுக்கு - பூதனையென்கிற பேய்ச்சி பிணமாகும்படி அவளது முலைப்பாலை யுண்டவனுமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
என் வாசம் குழலி - வாசனைபொருந்திய கூந்தலையுடையளான என்மகள்
இழந்தது மாண்பு - இழந்தது தன் மாட்சிமை யாம்.

 

விளக்க உரை

குருந்த மரமானது சாயும்படி முறித்த தனிவீரனுக்கு, சகடாசுரன் இறக்கும்படியாக உதைத்த மணவாளனுக்கு, பூதனையானவள் பிணமாகும்படி முலைப்பாலைக் குடித்த உபகாரகனுக்கு, என்னுடைய, வாசனை பொருந்திய கூந்தலையுடைய பெண்ணானவள் தன் மாண்பினை இழந்தாள்.

English Translation

My fragrant-tressed daughter has lost her beauty, -to the Lord who singly uprooted the Kurundu trees, to the groom who smote the laden cart, to the child who drank the ogress's milk and killed her

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்