விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தக்கார்மிக்கார்களைச்*  சஞ்சலம்செய்யும்சலவரை*
  தெக்காநெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை*
  எக்காலமும்சென்று*  சேவித்திருக்கும் அடியரை* 
  அக்கான்நெறியைமாற்றும்*  தண் மாலிருஞ்சோலையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஏ காலமும் - எப்போதும்
சென்று - போய்
சேவித்திருக்கும் - திருவடிதொழா நின்றுள்ள
அடியரை - பாகவதர்களை
தண் - தாபஹரமுமான

விளக்க உரை

தக்கார்-எம்பெருமானுக்குத் தகுதியானவர்கள், அதாவது நினைவு ஒற்றுமை யுற்றிருக்கை – “ஸர்வாத்மாக்களும் உய்வு பெறவேணும்‘ என்ற அருள் ஒத்திருக்கை. மிக்கார்-அவ்வருள் விஷயத்தில் எம்பெருமானுக்கும் மேற்பட்டவர்கள், அதாவது –எம்பெருமான் இவ்வாத்துமாக்களுடைய குற்றங்களின் மிகுதியையும், தனது ஸ்வாதந்திரியத்தையுங்கொண்டு சீற்றமுற்று, “பொறுக்கமாட்டேன், எந்நாளும் ஆஸுரயோநிகளில் தள்ளிவிடுவேன்‘ என்று ஒருகால் சொன்னாலுஞ் சொல்லக்கூடும். பாகவதர்கள் அங்ஙன்ன்றியே “சலிப்பின்றி ஆண்பெம்மைச் சன்மசன்மாந்தரங்காப்பர்“ என்றபடி என்றுமொக்க அநுக்ரஹ சீரோயிருப்பர் என்க. இதுபற்றியெ பாகவதர்களை ஆச்ரயிக்க வேண்டுமிடத்துப் புருஷகாரந் தேடவேண்டா என்றதும். இப்படிப்பட்ட மஹானக்களை நிலைகுலைத்துக் கொடுமைபுரிகின்ற கபடராக்ஷஸாதிகளை எம்பெருமான் நரகத்திற் புகச்செய்கின்றமை மன்னடிகளிற் கூறியது. சஞ்சலம் – வடசொல். சலவர் – “***“ என்ற வடசொல்லடியாப் பிறந்த பெயர், கபடத்தை யுடையவர்கள் என்பது பொருள் (தெக்கா நெறியே) யமனது பட்டணம் தக்ஷிண திக்கிலேயாகையாலும், நரகத்துக்குப் போவது அவ்வழியாலே யாகையாலும், “தெக்கா நெறி“ என்று யாம்யமார்க்கத்தைச் சொல்லுகிறது. தெக்கு-உக்ஷிணா என்ற வடசொற் சிதைவு, “அவாசிதக்கணம்யாமியந் தெக்கு, சிவேதை மற்றிவை தெற்கெனவாகும்? என்ற திவாகர நிகண்டு காண்க. செல்வன் – பிராட்டியை யுடையவன், * போதமர் செல்வக்கொழுந்திறே பிராட்டி. கான் நெறி – காட்டுவழி, பாவக்காட்டுவழி, என்க, “இறவுசெய்யும் பாவக்காடு“ என்பது காண்க.

English Translation

The wealthy Lord of the golden mountain of Malirumsolai sends the wicked Rakshasas,--who disturb peers and superiors, his devotees, -- through the southern path of death, while for those who go and worship him always; he has cleared a path through the forest of Karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்