விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சங்கு வில் வாள் தண்டு*  சக்கரக் கையற்கு,* 
    செங்கனிவாய்ச்*  செய்ய தாமரைக் கண்ணற்கு,* 
    கொங்கு அலர் தண் அம் துழாய்*  முடியானுக்கு,*  என் 
    மங்கை இழந்தது*  மாமை நிறமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு - பஞ்சாயுதங்களையும் திருக்கையிலே உடையவரும்
செம் கனி வாய் செய்ய தாமரை கண்ணற்கு - சிவந்த கனிபோன்ற அதரத்தையும் செந்தாமரைக் கண்களையுமுடையவரும்
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு - தேனொழுகப் பெற்றுக் குளிர்ந்தழகிய தருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவருமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
எள் மங்கை இழந்த்து - என்பெண்பிள்ளை யிழந்தது
மாமை நிறம் - அழகிய நிறமாம்.

விளக்க உரை

சங்கம் வில் வாள் தண்டு சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்த திருக்கரங்களையுடையவனுக்கு, சிவந்த கோவைக்கனி போன்ற திருவதரத்தையும் செந்தாமரைபோன்ற திருக்கண்களையுமுடையவனுக்கு, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனுக்கு, என் பெண்ணானவள் இழந்தது அழகிய நிறமேயாகும்.

English Translation

My beautiful daughter has lost the pink in her cheeks, -to the conch-bow-dagger-mace-discus wielder, Lord of red lotus eyes and coral lips, who wears honey-dripping Tulasi flowers on his crown.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்