விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலுக்கு*  வையம் அளந்த மணாளற்கு,* 
    நீலக் கருநிற*  மேக நியாயற்கு,* 
    கோலச் செந்தாமரைக்*  கண்ணற்கு,*
    என் கொங்குஅலர்ஏலக் குழலி*  இழந்தது சங்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாலுக்கு - அடியார் பக்கலில் வியாமோஹமுள்ளவரும்
வையம் அளந்த மனாளற்கு - பூமி முழவத்தையும் (த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட மணவாளரும்
நீலம கருநிறம் முகம் நியாயற்கு - நெய்த்துக் கறுத்த நிறத்தையுஐடய மேகத்தை யொத்தவரும்
கோலம் செம் தாமரை கண்ணற்கு - அழகிய செந்தாமரை போன்ற திருக்கண் களையுடைவனாவருமான எம்பெருமான் விஷயத்தில் ஈடுபட்டதனால்
என் கொங்கு அவர் ஏலம் குழலி இழந்து சங்கு - தேனொழுகும் மலர்களணிந்து நறுமணம் மிக்க கூந்தலை யுடையனாள என்மைகள் இழந்த்து கைவளையாம்.

விளக்க உரை

திருமாலுக்கு உலகத்தை எல்லாம் அளந்த மணவாளனுக்கு மிகக் கரிய நிறத்தையுடைய மேகம்போன்ற தன்மையனுக்கு அழகிய செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடையவனுக்கு என்னுடைய தேனோடு மலர்ந்த பூக்களையுடைய வாசனைபொருந்திய கூந்தலையுடைய மகள் இழந்தது சங்கவளையலேயாம்.

English Translation

My fair coiffured daughter has lost her bangles, -to the groom of beautiful red lotus eyes, who came as a manikin and measured the Earth the Lord of dark cloud hue.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்