விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்*  தேவ பிரானையே,* 
    தந்தை தாய் என்று அடைந்த*  வண் குருகூரவர் சடகோபன்,* 
    முந்தை ஆயிரத்துள் இவை*  தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,* 
    செந்தமிழ்ப் பத்தும் வல்லார்*  அடிமைசெய்வார் திருமாலுக்கே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவபிரானையே தந்தை தாய் என்று - தேவ பிரானையே ஸகலவித பந்துவுமாக அறுதியிட்டு
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அடைந்த - முக்யு காரணங்களாலும் ஆச்ரயித்த
வண் குருகூரவர் சடகோபன் - ஆழ்வார்
முந்தை ஆயிரத்துள் - அனாதியான இவ்வாயிரத்திலுள்ளளே
துலைவல்லி மங்கலத்தை சொன்ன இவை செந்தமிழிபத்தும் வல்லார் - துலைவில்லித் திருப்பதி விஷயமாக அருளிச்செய்த இப்பதிகத்தை ஓதவல்லவர்க

விளக்க உரை

(சிந்தையாலும்) இத்திருவாமொழி கற்பவர் கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற மஹாபலத்தைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. மநோவாக்காயங்களென்கிற மூன்று உறுப்புக்களாலும் தேவபிரானையே ஸகலவித பந்துவுமாகக்கொண்ட ஆழ்வார் அருளிய ஆயிரத்தினுள் துலைவில்லித் திருப்பத விஷயமான இத்திருவாய்மொழியை அதிகிக்க வல்லவர்கள் பெருமாளும் பிராட்டியுமாக இருவருமான சேர்த்தியிலே அடிமைசெய்யப்பெறுவர்கள் என்றதாயிற்று. முந்தையாயிரம் அநாதியான ஆயிரம் என்றபடி. ஆழ்வார் திருவாக்கில் நின்றும் அவதரித்தான் இத்திவ்வியப் பிரபந்தம் அநாதியானதென்று எங்ஙனம் சொல்லக்கூடுமென்று சிலர் சங்கிக்கலாம், இதற்கு ஆசார்யஹ்ருதயத்தில் விரிவான ஸமாதானமருளிச்செய்யப்பட்டுள்ளது. அதில், “வேதநூல் இருத்தமிழ்நூல் ஆஜ்ஞை ஆணை வசையில் ஏதமில் சுதி செவிக்கினிய ஒதுகின்றதுண்மை பொய்யில்பாடல் பண்டைநிற்கும் முந்தையழிவில்லா வென்னும் லக்ஷணங்களொக்கும்“ என்ற சூர்ணையினால் ஸம்ஸ்க்ருதவேத ஸாம்யத்தை நிர்வஹித்தருளி, “சொல்லப்பட்ட வென்ற விதி கர்த்துத்வம் ஸ்ம்ருதி அத்தை ஜ்வம்ப்படைத்தா னென்றது போலே“ என்ற மேல் சூர்ணையினால் ப்ரக்ருத சஙகாபரிஹாரம் செய்யப்பட்டது. ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு எப்படி கர்த்தா இன்னாரென்று தெரியாமலிக்கிறதோ அப்படியே இத்திவ்யப்பிரபந்தத்திற்கும் கர்த்தா தெரியாமலிக்கவேண்டாவோ? அப்படியன்றிக்கே “குருகூர்ச்சடகோபன் சொல்லப்பட்ட வாயிரம்“ என்று இதில் ஆழ்வார்க்கு கர்த்ருத்வம் ஸ்பஷ்டமாகத் தெரிகின்றதே! இது எங்ஙனே பொருந்தும்படி? என்று சங்கித்துக்கொண்டு, ••• ஸ்ருதியானது அந்த வேதத்தை ப்ரஹ்மா ஸ்ருஷ்டித்தானென்று சொல்லியிருப்பதை நிர்வஹிக்குமாபோலே இதையும் நிர்வஹிக்கக் குறையில்லையென்று ஸமாதானம் காட்டப்பட்டது. மேலும் விரிவு காண்க.

English Translation

This decad of Tamil songs on the Lord of Tulaivilli-Mangalam, from the pure thousand by kurugur Satakopan, who attained the Lord a his father and mother in thought, word and deed, will secure a life of service to the Lord, for those can who sing it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்