விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பின்னைகொல் நிலமாமகள்கொல்?*  திருமகள்கொல் பிறந்திட்டாள்,* 
    என்ன மாயம்கொலோ?*  இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்,* 
    முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும்*  தொலைவில்லிமங்கலம்- 
    சென்னியால் வணங்கும்*  அவ் ஊர்த் திருநாமம்*  கேட்பது சிந்தையே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவள் - இப்பெண்பிள்ளையானவள்
பின்னைகொல் - நப்பின்னைப் பிராட்டியோ!
மா நிலம் மகள் கொல் - பெருமைதங்கிய பூமிப்பிராட்டியோ!
திருமகள் கொலபிறந்திட்டாள் - (அல்லது) ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷமியே வந்து பிறந்தபடியோ!
என்ன மாயம் கொலோ - இது என்ன அதிசயமோ!

விளக்க உரை

(பின்னைகொல்) பராங்குசநாயகியின் ப்ராவண்யமிகுதியைக் கண்டு ‘இவள் பிராட்டிமாரிலே ஒருத்தியர்!‘ என்று சங்கீக்கின்றமை கூறுகிறது இப்பாட்டில், ஆழ்வார் க்ருஷ்ணாவதாரத்திலே யீடுபட்டிருக்குந் தன்மையை நோக்குங்கால்,ஸாக்ஷாத் நம்பின்னைப்பிராட்டிதானோ! என்னவேணும். வராஹப்பெருமான் திறத்தில் ஈடுபட்டிற்குந் தன்மையை நோக்கக்கக்கு மளவில் ஸாக்ஷாத் பூமிப்பிராட்டிதானோ! என்னாலாகும். ஸ்ரீராமவதாரத வீடுபட்டை நோக்கினால் ஸாக்ஷாத் ஸீதாபிராட்டிதானோ! ப்ராப்தம். பின்னைகொல் * எருதேழ்தழீஇக் கோளியார் கோவலனார் குடக்கூத்தனால் தாளிணை மேலணி தண்ணந்துழாயென்றே நாளுநாள் நைகின்றது * என்று, ஏறுதழுவுகை முதலான செயல்களையுடைய கண்ணபிரான் திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்பட்டு நாள்தோறும் சைதில்யத்தை யடைவது, * கறையினார் துவருடுக்கை கடையாவின்கழிகோல்கைச் சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே * என்று கண்ணபிரான் விரும்பாத நிறம் எனக்கு வேண்டாவென்பதாய்ப் பேசின பாசுரங்களில் நப்பின்னைப் பிராட்டியின் ஸாம்யம்தோன்றும்.

English Translation

What a miraculous birth she has taken! She calls "O Lord! you came to live permanently, standing and sitting inTulaivilli-Mangalam". She bows her head and only yearns to hear the name of that town. Is she Nappinnai, or Bhu-devi or Lakshmi? I wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்