விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ*  இவள் கண்ண நீர்கள் அலமர,* 
    மரங்களும் இரங்கும் வகை*  'மணிவண்ணவோ!' என்று கூவுமால்,* 
    துரங்கம் வாய் பிளந்தான் உறை*  தொலைவில்லிமங்கலம் என்று,*  தன் 
    கரங்கள் கூப்பித் தொழும்*  அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நான் தொறும் இரங்கி வாய் வெரீஇ - நாடோறும் நெஞ்சழிந்து வாய்வெருவி
கண்ண நீர்கள் அலமர - கண்ணீர் பெருக வியாகுலப்பட்டு நின்று
மரங்களும் இரங்கும் வகை - மரங்களுங்கூட இங்கும்படியாக
ஓ மணிவண்ண என்று கூவும் - ஓ மணிவண்ணனே! எனறு கூப்பிடாநின்றாள், (அதுவுமல்லாமல்)
துரங்கம் வாய் பிளந்தான் உறை துலைவில்லிமங்கலம் என்று - குதிரைவடிவு கொண்டு வந்த அசுரனுடைய வாயைப்பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்கின்ற துலைவில்லித்திருப்பதியென்று

விளக்க உரை

(இரங்கிநாடொறும்) இவளைத் துலைவில்லித் திருப்பதியிலே கொண்டுபுக்கு அவ்வூர்த்திருநாமத்தை நீங்கள் கற்பிக்க இவள் கற்றதற்பின் அநவரதமும் அவன் திருநாமத்தையே வெருவி அஃறிணைப் பொருள்களுங்கூடக் கரையும்படி மஹத்தான ஆர்த்தியோடே ஓமணிவண்ணாவென்று கூப்பிட்டழைத்துத் துலைவில்லிமங்கலமென்று சொல்லித் தன் கைகளைக் கூப்பித் தொழுகின்றாள், அன்னைமீர்! இதெல்லாம் உங்களாலே வந்ததத்தனை என்கிறாள் தோழி. மரங்களுமிரங்கும்வகை என்றது – பகவத்விஷயத்தில் ஈடுபாடில்லாமையாலே அசேதந ப்ராயர்களான அறிவிலிகளுங்கூட ஈடுபடும்படியாயிற்று என்கை. மரங்களும் இரங்கக்கூடுமோவென்று எம்பாரைச் சிலர் கேட்டார்களாம். அதற்கு அவர் அருளிச்செய்த உத்தரம் – இத்திருவாய்மொழி அவதரித்தவன்று தொடங்கி பாவசுத்தியில்லாத எத்தனைபேர்களுடைய வாயிலே இது புகுந்த்தென்று தெரியாது, இங்ஙனேயிருக்கச்செய்தே, யமநியமாதிக்ரமத்தாலே இன்று அழிகிறபடிகண்டால் மைகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ? என்றாம். கண்ணபிரான் புல்லாங் குழலூதும்போது * மரங்கள் நின்று மதுதாரைகள்பாயும் மலர்கள் விழும் வளர் கொம்புகள் தாழும் * என்னும்படியானதெல்லாம் ஆழ்வாருடைய ஆர்த்தநாதத்திலும் ஆகச்சொல்லவேணுமோ?

English Translation

Ever since this girl learnt the town's name. She weeps and speaks disjointedly. "O, Manivanna!" She calls, with a cry that would melt a tree. "The Lord who ripped the horse's jaws lives inTulavilli-Mangalam", she says, then joins her hands in silent prayer.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்