விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருந்து வேதமும் வேள்வியும்*  திருமா மகளிரும் தாம்,*  மலிந்து 
    இருந்து வாழ் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 
    கருந் தடம் கண்ணி கைதொழுத*  அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்* 
    இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'*  என்று என்றே நைந்து இரங்குமே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருந்து வேதமும் வேள்வியும் திருமா மகளிரும்தாம் - பரிசுத்தமான வேதங்களும் வேதோக்த கருமங்களும் ஸம்பத் ஸம்ருத்யுமாகிறவிவை
மலிந்து இருந்து வாழ் - நிரம்பியிருந்து விளங்கப்பெற்றதாய்
பொருநல் வடகரை - தாமிரப்பரணியின் வடகரயிலுள்ளதாய்
வண் - தர்சநீயமான
தொலைவில்லிமங்கலம் - தொலைவில்லித் திருப்பதியை

விளக்க உரை

(திருந்து வேதமும்) துலைவில்லித் திருப்பதியை ஸேவிக்கப்பெற்ற அந்நாள் தொடங்கி இப்பெண்பிள்ளை அத்தலத்து எம்பெருமானது கண்ணழகிலேயே யீடுபட்டுத் தளராநின்றாளென்கிறது. வேதபாராயணங்களும் யஜஞயாகங்களும் ஸம்ருத்தமாய் ஸ்ரீதேவி பூதேவிகளோடே எழுந்தருளியிருக்கப்பெற்ற திருப்பதியென்று தலத்தின் மகிமை கூறுவன முன்னடிகள். திருந்து வேதம் – ஸ்வரவர்ணக்ரமங்கள் ஒன்றும் பிறழாமே எப்போதும் எவ்விடத்தும் ஒழுங்குபட விளங்கப்பெற்ற வேதம் என்றபடி. வேள்வி – அந்த வேதங்களில் ஓதப்பட்ட பகவதாராதந க்ரியா கலாபங்கள். திருந்து வேதமும் வேள்வியும் மலிந்து வாழ், திருமாமகளிரும் தாமும் இருந்துவாழ் என்று யோஜித்துக்கொள்ளலாம். கருந்தடங்கண்ணி – வெளிக்கண்ணின் அழகுசொன்னவிது ஸ்வாபதேசத்தில் உட்கண்ணின் அழகு சொன்னபடி. கரியகோலப்பிரானை விஷயீகரிக்கின்ற விசாலமான ஞானக்கண் படைத்தவர் ஆழ்வார் என்றபடி. இருந்திருந்து அரவிந்தலோசன வென்றென்றே – இங்கே ஈடு – “ஒருகால் அரவிந்தலோசன! என்னும்போது நடுவே பதின்கால் பட்டைப்பொதிசோறு அவிழ்க்கவேணும்“ என்று. அதாவது – திருநாமத்தைச் சொல்லவேணுமென்று தொடங்கும் போதே நைந்து உள்கரைந்து உருகுகிறபடியாலே நெடுகச் சொல்லமாட்டாதே இடையிடையே தளர்கின்றமை சொன்னவாறு.

English Translation

The Lord lives in plenty on the Northern banks on Porunal, in prosperous Tulaivilli-Mangalam, amid Vedic chanters and Lakshmi-like ladies. Since the day this dark-eyed fawn worshipped him there, everyday she says "Aravindalochana" patiently, then falls and weeps.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்