விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்னைமீர்! அணிமாமயில்*  சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து* 
    என்ன வார்த்தையும் கேட்குறாள்*  தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்,* 
    முன்னம் நோற்ற விதிகொலோ*  முகில் வண்ணன் மாயம் கொலோ,* அவன் 
    சின்னமும் திருநாமமும்*  இவள் வாயனகள் திருந்தவே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னைமீர் - தாய்மார்களே!
அணி மா மயில் சிறு மான் இவள் - அழகிற் சிறந்த மயில்போன்றும் சிறிய மான்பேடை போன்றுமிராநின்ற இப்பெண்பிள்ளை
நம்மை கைவலிந்து - நம்மைக் கைவிட்டொழிந்து
துலைவில்லிமங்கலம் என்று அல்லால் என்ன வார்த்தையும் கேட்க உறாள் - துலைவில்லித் திருப்பதிப் பேச்சுதவிர வேறு எந்தப்பேச்சும் கேட்க விரும்புகின்றிலள் (இப்படியானவிது)
மூன்காம் நோற்ற விதி கொலோ - முன்பு செய்த ஸுக்ருத பலனோ!

விளக்க உரை

(அன்னைமீரணிமாமயில்) சில வஸ்துக்கள் ஆச்ரயபலத்தாலே மேன்மைபெறுவது என்றுண்டு, •••• தந்யாநி ஸ்தலவைபவோகதிசித் வஸ்தூநி * என்றார்கள் கவிகளும். எம்பெருமானுடைய லக்ஷணங்களும் திருநாமங்களும் இப்பெண்பிள்ளைவாயில் நுழைந்து புறப்படுகையாலே போலும் அழகுபெற்றன என்கிறாள் தோழி. அணிமாமயில் சிறுமானிவள் – மயில் தோகை போன்ற கூந்தலையுடையையாலே வளா யிராநின்ற இப்பெண்பிள்ளை * என் சிறகின்கீழடங்காப் பெண்ணைப்பெற்றேன். * என்னுமாபோலே நம் கை கடந்து அந்தோ! தோழியான என்னுடைய வார்த்தையிலும் ஆதரமற்றவளானாள், துலைவில்லித் திருப்பதியைப்பற்றி நான் பேசப்புகுந்தால் அப்போது என் வார்த்தைக்குக் காதுகொடுக்கிறாளே யல்லது வேறு எந்த வார்த்தைக்கும் செவிதாழ்க்கிறாவல்லள் என்கிறாள் முன்னடிகளால். ஆழ்வாருடைய பெருமை ஆர்க்கும் நிலமன்று என்று காட்டுகிறது மூன்றாமடி. முன்னம் நோற்ற விதிகொலோ? இந்த ஜன்மத்திலே இவள் ஒரு ஸுக்ருதம் பண்ணினதாகத் தெரிந்ததில்லை, ஜந்மாந்தர ஸஹஸ்ர ஸஞ்சிதமான ஸுக்ருத விசேஷங்கள் திரண்டு இங்ஙனே பலித்தபடியோ! அல்லது, முகில் வண்ணன் மாயங்கொலோ? எம்பெருமானுடைய விலக்ஷண ஸங்கல்பத்தினாலே இப்படி திருந்தினபடியோ? என்கை. ஒரு சேதநன் தன் முயற்சியினாலே ஸாதிக்கிற அசேதந க்ரயைக்கு இவ்வளவு பலன் பெறுவிக்க சக்தியில்லாமையாலே ‘முன்னம் நேரற்ற விதிகொலோ‘ என்று ஸந்தேஹிக்கலாயிற்று. எம்பெருமானுடைய ஸங்கல்பம் இதற்கு முன்பு இப்படி ஒரு வ்யக்தியிலும் பலிக்கக் காணாமையாலே ‘முகில்வண்ணன் மாயங்கொலோ‘ என்று இதுதன்னிலும் ஸந்தேஹிக்கலாயிற்று.

English Translation

O Ladies, this peacock-fair fawn has slipped out of your hands. She cannot hear anything save "Tulaivilli-Mangalam". His symbols and his names alone are on her lips, unfailingly. Alas! Is this the fruit of her past karmas, or the Maya-tricks of the Lord?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்