விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நோக்கும் பக்கம் எல்லாம்*  கரும்பொடு  செந்நெல்ஓங்கு செந்தாமரை,* 
    வாய்க்கும் தண் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 
    நோக்குமேல் அத்திசை அல்லால்*  மறு நோக்கு இலள் வைகல் நாள்தொறும்,* 
    வாய்க்கொள் வாசகமும்*  மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னைமீர் - தாய்மார்களே!
நோக்கும் பக்கம் எல்லாம் -பார்த்த பார்த்த விடமெல்லாம்
ரும்பொடு செந்நெல் ஒங்கு - கரும்பும் செந்நெற்பயிர்களும் உயர்ந்து விளங்கப்பெற்றதும்
செம் தாமரை வாய்க்கும் - செந்தாமரைகள் நிரம்பப்பெற்றதும்
தண் - குளிர்ந்ததுமான

விளக்க உரை

நோக்கும்பக்கமெல்லாம்) இப்பெண்பிள்ளை பெரும்பாலும் மோஹித்திருக்குமிருப்பேயல்லது கண்ணைத்திறந்து பார்ப்பதென்கிற கதையேயில்லை, ஒருகால் பார்த்தாளாகில் அத்திருப்பதியுள்ள விடமொழிய மற்றோரிடமும் பார்ப்பதில்லை யென்கிறாள் தோழி. எந்தவிடம் பார்த்தாலும் கருப்பஞ்சோலையும் செந்நெற் பயிர்களும் தாமரைக் காடுமாகவே திகழாநின்ற தாமிரபர்ணியின் வடகரையிலே விளங்குமதான துலைவில்லித் திருப்பதியையன்றி மற்றொருதிக்கைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை, வாய்கொண்டு பேசப்புகுந்தாலோ வாயில்வரும் பேச்செல்லாம் மணிவண்ணனான அப்பெருமானுடைய திருநாமமாயிருக்குமே யல்லது வேறொன்றும் இவளது வாயில் வாராது என்றவாறு. கரும்பு செந்நெல் செந்தாமரை என்னுமிவை ஸ்வாபதேசப் பொருளில் அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் விலக்ஷணப்ரக்ருதியைத் தெரிவிப்பனவாம். கரும்பு என்றது மதுர ப்ரக்ருதிகள் என்கை. செந்நெல் என்றது * வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே * என்று பெரியாழ்வாரருளிச்செய்தபடி, வித்யைகள் நிரம்பப்பெற்று விநயமே வடிவெடுத்திருக்கும்படி சொன்னவாறு. செந்தாமரை யென்றது – ஸாரக்ராஹிகளால் ஸேவிக்கப்படுந்தன்மை சொன்னபடி. ஆக, மதுரப்ரக்ருதிகளாய், வித்யாவிநய ஸம்பந்நர்கவாய், மதுகாவ்ருத்திகளால் ஆச்ரயிக்கப்பட்டவர்களான ஸ்ரீவைஷ்ணவ சிகாமணிகள் நிரம்பிய தலம் என்றதாயிற்று.

English Translation

The wealthy Tulaivilli-Mangalam lies on the Northern banks of cool porunal, where sugarcane, paddy and lotus grow fall all around. Since that fateful day, this girl locks that-a-ways night and day and only multers the names of the gem-hued Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்