விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குமுறும் ஓசை விழவு ஒலித்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    அமுத மென் மொழியாளை*  நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,* 
    திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்*  மற்று இவள்தேவ தேவபிரான் என்றே,* 
    நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க*  நெக்கு ஒசிந்து கரையுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

(அன்னைமீர்) - தாய்மார்களே!
குமிறும் ஓசை விழவு ஒலி - ஆராவாரிக்கின்ற ஓசையையுடைய உத்ஸவ கோலாஹலங்களையுடைத்தான
துலைவில்லிமங்கலம் - இரட்டைத்திருப்பதியிலே
அமுதம் மெல்மொழியவளை - அமுதம்போன்று மதுரமானமெல்லிய வாய்மொழிகளை யுடையவளான இப்பெண் பிள்ளையை
நீர் கொண்டு புக்கு - நீங்கள் அழைத்துக்கொண்டுபோய்

விளக்க உரை

(குமிறுமேசை) ஸாதாரணமாகத் துலைவில்லித் திருப்பதியின் ஸந்நிவேசந்தானே ஆகர்ஷகமாயிருகும், அதுதன்னிலும் உத்ஸவகாகலங்களில் சென்றாலோ “வேதவொலியும் விழாவொலியும்“ என்றாற்போலே பலவகையான த்வனிகள் செவியமுதமாகக் கேட்டகப்பெற்று அங்கு நின்றும் கால்பேரவொண்ணாதபடி யிருக்கும். அப்படிப்பட்ட உத்ஸவகாலகங்களிலும் தாய்மார் இப்பெண்பிள்ளையை அங்கு அழைத்துக்கொண்டு செல்லுகையாலே ஈடுபாடு அதிகமாயிற்றென்கிறான் தோழி. குமிறுமோசைவிழவொலி என்ற விடத்துப் பரமபோக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்தி-•••••தேஷாம் புண்யாஹகோஷோத கம்பீரமதுரஸ்வந, அயோத்யாம் பூரயாமாஸ தூர்யநாதாநுநாதிக, * என்று, ஒத்துச் சொல்லுவார் ஸங்கீர்த்தாம் பண்ணுவார் பாடுவார் இயல்விண்ணப்பஞ் செய்வாராய் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக்கொண்டு எழுகிற த்வநியையுடைய திருநாளிலாரவாரம். பாவியேன்! இத் த்வநி செவிப்பட்டால் கொண்டு மீளவன்றோவெடுப்பது, இவ்விடம் பிள்ளைகொல்லி‘ என்று கூப்பிடுமாபோலே காணும் த்வநியிருப்பது. அவ்வூரும் திருநாளும் அங்குள்ளார் படுகிறதும் கண்டுவைத்து இவளைக் கொண்டு புகுவாருண்டோ?

English Translation

You took this sweet and soft-spoken girl to Tulaivilli-Mangalam,-gay with festival sounds, -then abandoned her without a heart, she lies like one possessed, her lips form "Devadevapiran', her eyes well with tears, she falls and then melts, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்