விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துவள் இல் மா மணி மாடம் ஓங்கு*  தொலைவில்லிமங்கலம் தொழும் 
    இவளை நீர் இனி அன்னைமீர்!*  உமக்கு ஆசை இல்லை விடுமினோ,* 
    தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்*  தாமரைத் தடம் கண் என்றும்,* 
    குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க*  நின்று நின்று குமுறுமே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னைமீர் - தாய்மார்களே!
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு - குற்றமற்றச் சிறந்த ரத்நங்களையுடைய மாடங்கள்விளங்கப்பெற்ற
தொலைவில்லி மங்கலம் - துலைவில்லிமங்கல மென்கிற இரட்டைத்திரப்பதியை
தொழும் இவளை - தொழாநின்ற இப்பராங்குசநாயகியை
நீர் இனி விடுமின் - நீங்கள் இனி உபேக்ஷித்துவிடுங்கள்,

விளக்க உரை

(துவளில் மாமணிமாடம்) ஸ்ரீ ஜநகராஜன் திருமகள் பிறந்தபோது சோதிடர்களை வரவழைத்து ‘இவளுடைய அத்ருஷ்ட பாகங்கள் எப்படியிருக்கிறது சொல்லுங்கோள்‘ என்று கேட்கையில், சோதிடர்கள் பார்த்து “இவளுடைய பாக்கியம் மிக நன்றாகயிருக்கிறது. ஒரு குறையுமில்லை. ஸார்வபௌமனாயிருப்பா னொருவனைக் கைப்பிடிப்பாள், ஆனால் வநவாஸம் அநுபவிக்கநேரும்“ என்றார்களாம். அப்படியே இப்பராங்குசநாயகி பிறந்தபோதும் இவளது திருத்தாயார் முதலானார் சோதிடர்களை அழைத்து பாக்ய விசேஷங்கள் விசாரிக்கையில் “எல்லாம் நன்றாகவே யிருக்கிறது. இவள் உயர்வறவுயர் நலமுடையனான அயர்வறும்மார்களதிபதியால் மயர்வறமதிநலமருளப்பெறுவள், உலகம் நிறைந்த புகழ்பெறுவள், தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல்மாலைகள் சொல்லுவள்“ என்று பலவும் சொல்லிவிட்டு, ‘ஆனால் இவளுக்கு ஓர்அபம்ருத்யுவுண்டு, அது என்னென்னில், இவளைத் தூலைவில்லிமங்கலத்திலே நீங்கள் கொண்டு சென்றீர்களாகில் இவளை இழக்க நேரும், ஆகவே அங்குக்கொண்டு போகாமலிருந்தீர்களாகில் இவளோடே கூடி நிங்கள் நெடுங்காலம் வாழலாம், இந்த வொரு கண்டத்துக்கு தப்பிப்பழைப்பது கஷ்டமே, என்று சோதிடர்கள் சொல்லியிருந்தார்களாம். ஆகிலும் இவளைத் துலைவில்லிமங்கலத்தில் கொண்டுபோகாதிருக்கும்படியான குடியன்றே. இவளைப்பெறுவோமானாலும் சரி, இழப்போமானாலும் சரி, அங்கு அழைத்துக்கொண்டுபோய் ஸேவை பண்ணிவைத்தே தீருவது என்றிருக்கும் குடியாகையாலே அப்படியேசெய்து போரநேர்ந்தது. அதனால் விளைந்த அநர்தத்தைத் தோழி எடுத்துரைக்கிறேன்.

English Translation

O Ladies, pry leave the girl alone, you have no love anymore. Her dark lotus eyes brim with tears, haltingly she murmurs. "Beautiful conch and discus". Large lotus eyes" and "spotless jewel mansions rise in Tulavili-Mangalani".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்