விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்*  வீங்கு இருள்வாய்- 
    பூண்டு*  அன்று அன்னைப் புலம்ப போய்*  அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்* 
    காண்டல் இன்றி வளர்ந்து*  கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,* 
    ஈண்டு நான் அலற்றப்பெற்றேன்*  எனக்கு என்ன இகல் உளதே?    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவர் இரக்க - தேவதைகள் பிரார்த்திக்க
வேண்டி - திருவுள்ளமுவந்து
வந்து பிறந்ததும் - நிலவுலகத்தில் வந்து அவதரித்ததென்ன
அன்று - அப்போதே
அன்னை - பெற்றதாயான தேவகி

விளக்க உரை

(வேண்டித்தேவர்) தேவர் இரக்கவந்து பிறந்தது, வேண்டிவந்து பிறந்தது என்று இரண்டாக யோஜித்துக்கொள்வது. தங்களுக்குப் பகைவரான அக்கரசுரர்களைவந்து முடிக்க வேணுமென்று தேவர்கள் பிரார்த்திபவர்களாதலால் துஷ்டர்களை சிக்ஷிப்பதற்காக வந்து பிறந்தமை “தேவர் இரக்க“ என்பதனால் பெறப்படும். பரமபதத்தில் இருந்துகொண்டே ஸங்கல்பமாத்திரத்தினாலாவது திருவாழியாழ்வானை யிட்டாவது துஷ்டர்களைத் தொலைத்திட முடியுமாதலால் அதற்காக பகவான் வந்து பிறக்கவேண்டிய அவசியமில்லை, தன் வடிவழகு, பேச்சினிமை முதலியவற்றைக்காட்டி ஸாதுக்களை வாழ்விக்கவேண்டிய வந்து பிறந்தனனாதலால் அல்வர்த்தகம் வேண்டி என்பதனால் காட்டப்பட்டது. வேண்டி – தான் விரும்பி என்றபடி. கீதையில் ••••பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம், தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே. * என்பது எம்பெருமானுடைய திருமுகப்பாசுரம். சிஷ்டர்களை ரக்ஷிப்பதற்கும் துஷ்டர்களை சிக்ஷிப்பதற்கும் அறநெறியை நிலை நாட்டுவதற்கும் அடிக்கடி அவதாரங்கள் செய்து போருவேன் என்றருளிச்செய்து வைத்தான் நாட்டுவதற்கு அடிக்கடி அவதாரங்கள் செய்து போருவேன் என்றருளிச்செய்து வைத்தான். இதில் பகவதவதாரத்திற்கு மூன்று பிரயோஜனங்கள் சொல்லப்பட்டுள்ளன, (சிஷ்ட பரிபாலனம், துஷ்ட நிக்ரஹம் தர்மஸ்தாபனம் என்பன.) இவை மூன்றும் உண்மையில் ஒர பிரயோஜனமாகத் தலைக்கட்டக் கூடியதாம். எங்ஙனேயென்னில், பரித்ராணாய ஸாதூநாம் என்று முதலிலே சொல்லப்பட்ட கிஷ்டஜநரக்ஷணமாவது அவர்களின் விரோதிகளைப்போக்கி என்று முதலிலே சொல்லப்பட்ட சிஷ்டஜநரக்ஷணமாவது அவர்களின் விரோதிகளைப் போக்கி அவர்களுக்கு அபிமதமான தர்மஸ்தாபனத்தைச் செய்துவைப்பதேயாம். ஆகையாலே பரித்ராணாய ஸாதூநாம் என்றதற்கே மற்றவை யிரண்டும் விவரணரூபம் என்று கொள்ளத்தகும்.

English Translation

He was born in answer to the gods' prayers, as the child of Devaki. Then he left her weeping in the darkness of the night, and entered Nanda's home. He grew up incognito and performed many miracles, then killed kams? I have the fortune of singing his praise, now who in the world is my enemy?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்