விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*  இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்* 
    சாவப் பால் உண்டதும்*  ஊர் சகடம் இறச் சாடியதும்,* 
    தேவக் கோலப் பிரான்தன்*  செய்கை நினைந்து மனம்குழைந்து,* 
    மேவக் காலங்கள் கூடினேன்*  எனக்கு என் இனி வேண்டுவதே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உரலோடு ஆர்க்க - உரலோடு சேர்த்துப் பிணைக்க
வஞ்சம் பெண்ணை சாவ - வஞ்சனைசெய்யவந்த பூதனை முடியும்படியென்ன
பால் உண்டதும் - அவளது முலைப்பாலை உண்டதென்ன
ஊர் சகடம் இறசாடியதும் - (அஸுராவேசத்தாலே) ஊர்ந்துவந்த சகடம் பொடிபடும்படி தகர்த்ததென்ன (ஆக இப்படிப்பட்ட)
தேவக் கோலம் பிரான் தன் செய்கை - அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹனான கண்ணபிரானுடைய செயல்களை

விளக்க உரை

நோவவாய்ச்சி) இங்கே நம்பிள்ளை யீடு – “ஜீயர் இப்பாட்டை இயலருளிச்செய்யப் புக்கால் நோவ என்றருளிச் செய்யுமழகுகாணும். நேரவ்வென்கிறார்காணும் ஆழ்வார் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே! யசோதைப்பிராட்டியானவள் கண்ணனை உரலோடே கட்டிவைக்க அப்போது எங்கியிருந்தபடியைச் சொல்லுகிறது. * அஞ்சவுரப்பாளசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும் * என்னும்படியான யசோதைப்பிராட்டியானவள் கண்ணபிரானுடைய திருமேனியிலே நோவு உண்டாகும்படி ஒரு காரியஞ் செய்ய ப்ரஸிக்தியில்லையாயிருக்க, இங்கு நோவ என்றது – இச்செயலை அநுஸந்திப்பவர்களின் உள்ளம் நோவ என்றபடி. ஆழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் – ப்ரேம்ணாத தாமபரிணாமஜுஷா பபந்த தாத்ருங் ந தே சரிதம் ஆர்யஜநாஸ் ஸஹந்தே என்றருளிச்செய்தது இங்கு அநுஸந்தேயம்.

English Translation

Oh, how he wept when Yasoda tied him to the mortar! He drank from the poisoned breasts of putana and dried her to the bones. He destroyed the cart with his foot. My heart melts to think of him. My days are spent lovingly, now what on Earth do I need?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்