விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்*  குன்றம் ஒன்று ஏந்தியதும்* 
    உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்*  உட்பட மற்றும் பல* 
    அரவில் பள்ளிப் பிரான்தன்*  மாய வினைகளையே அலற்றி,* 
    இரவும் நன் பகலும் தவிர்கிலன்*  என்ன குறை எனக்கே?        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆய்ச்சியரோடு - கோபிமார்களோடு 
குரவை கோத்ததும் - ராஸக்ரீடை செய்த தென்ன
குன்றம் ஒன்று ஏந்தியதும் - கோவர்த்தன மென்கிற மலையொன்றைக் குடையாக வெடுத்ததென்ன,
உரவு நீர் பொய்கை - முதிர்ந்த ஜலத்தையுடைத்தான யமுனைப் பொய்கையில்
நாகம் காய்ந்ததும் - காளியநாகத்தை முனிந்ததென்ன

விளக்க உரை

(குரவையாய்ச்சியரோடு) ராஸக்ரீடை, கோவர்த்தநோத்தரணம், காளியமர்த்தனம் என்கிற மூன்று அபதானங்களை இதிற்பேசி இனியராகிறார். தமிழில் குரவைக்கூத்தென்பதே வடமொழியில் ராஸக்ரீடை எனப்படும். •••• அங்கநாமங்கநாமந்தரே மாதவ, மாதவம் மாதவஞ்சாந்தரேணாங்கநா * என்கிறபடியே ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாகப்பல வடிவுபடைத்து நின்று கைகோத்தாடல். இங்கு முதன்முதலாகக் குரவைக் கூத்தைப்பற்றிப் பேசுவானேன்? என்று சங்கித்துக் கொண்டு நம்பிள்ளை யருளிச்செய்வது பாரீர் – “* மின்னிடைமடவாரிலுண்டான தம்முடைய ப்ரணய ரோஷத்தைப் போக்கித் தம்மைச் சேரவிட்டுக் கொண்டபடி, திருக்குரவையில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாப் போலேயிருக்கையாலே அதுமுன்னாகப் பேசுகிறார். தாம் அநுஸந்திக்கிலிறே ஓரடைவாக இழிவது, அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறார். திருக்குரவையிற் பெண்ளோடுண்டான கல்வியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக்கொடுத்தது. பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களெல்லாரோடுங் கலந்த ப்ரீதியுண்டாயிற்று இவரொருவரோடே கலந்த ப்ரீதி.“

English Translation

Night and day I have sung the wonderful exploits of my Lord Krishna, -his blending with the Gopis in Rasa, his lifting the mount, his dancing on the hooded snake, and many, many more. Now what do I lack?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்