விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த* 
    தாள் இணையன் தன்னைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
    ஆணை ஆயிரத்துத்*  திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்* 
    கோணை இன்றி விண்ணோர்க்கு*  என்றும் ஆவர் குரவர்களே*. (2)        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகீர் - உலகத்திலுள்வர்களே! 
கரண்மின்கள் என்று - இந்த விநோதத்தைக் காணுங்கோள் என்று (சொல்பவன் போன்று)
கண் முகப்பே நிமிர்ந்த- கண்ணெதிரே ஓங்கி வளர்ந்த
தான் இணையன் தன்னை - உபயபாதங்களை யுடையவனான எம்பெருமான் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன - நம்மாழ்வார் அருளிச் செய்த

விளக்க உரை

(காண்மின்கள்) இத் திருவாய்மொழியை அதிகரிக்கவல்லவர்கள் நித்யஸூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். இப் பதிகமானது * காண்மின்களாலகீரென்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன்தன்னைக் குறித்து அருளிச்செய்ததாகத் தகும், ஏனெனில், மாவலியை வடிவழகாலும் பேச்சில் இனிமையாலும் மயக்கினதுபோல இருக்கும் மயக்கித் தன் காரியத்தை ஸாதித்துக் கொண்டதனால். ஆணையாயிரம் – •••• ஸ்ம்ஸ்க்ருத வேதமானது எப்படி பகவதாஜ்ஞாரூபமமோ அப்படியே இத் தமிழ்வேதமும் என்க. விண்ணோர்க்கு என்றும் குரவர்களாவர் – இத் திருவாய்மொழியை ஓதுமவர்கள் நித்ய ஸூரிகளுக்குக் குரவர்களாகையாவது என்னென்னில், - * பாவியேனைப் பல நீ காட்டிப்படுப்பாயோ என்னும்படியான இருள்தருமாஞலத்தில் இருந்துகொண்டே இவர்கள் இப்படி பகவத் குணாநுபவம் பண்ணப் பெறுகின்றார்களே! இதுவன்றோ ஆச்சரியம்! நாம் * நலமந்தமில்லை தோர்நாட்டிலே யிருந்துக்கொண்டு குணுநுபவம் பண்ணுவதில் என்ன விசேஷம்? நம்மிற்காட்டில் இவர்களேயன்றோ சீரியர்கள்! என்று கொண்டாடப்பெறுதலாம். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி – “ஸம்ஸாரத்தேயிந்துவைத்தே நம்படி ஒருவனுக்கு உண்டாவதே! என்று (நித்யஸூரிகள்) கொண்டாடியிருப்பர்கள்.“

English Translation

This decad of the thousand songs, by kurugur Satakopan addresses the Lord of Tiru-vinnagar who grew before our eyes when he came begging as a lad and said, "Behold, O Ball". Those who can sing it with mastery will become Gurus to the gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்