விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வன்சரண் சுரர்க்கு ஆய்*  அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்* 
    தன்சரண் நிழற்கீழ்*  உலகம் வைத்தும் வையாதும் 
    தென்சரண் திசைக்குத்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    என்சரண் என் கண்ணன்*  என்னை ஆளுடை என் அப்பனே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுரர்க்கு வன் சரண் ஆய் - தேவர்களுக்குச் சிறந்த புகலிடமாய்
அசுரர்க்கு வெம்கூற்றமும் ஆய் - அஸுரர்களுக்கு வலிய மிருத்யுவாய்
உலகம் தன் சரண் நிழல் கீழ் வைத்தும்வையாதும் - உலகத்தைத் தன் திருவடிச் சரயையிலே ஒதுக்கியும் ஒதுக்காமலும் (இருந்துகொண்டு)
தென் திசைக்கு சரண் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் - தென்திசைக்குள்ளே புகலிடமான திருவண்ணகரிலே தங்கியுள்ள பெருமான்
என்சரண் - எனக்கு சரண்யன்

விளக்க உரை

(வன்சரண்) தேவர்களுக்கு எந்த ஆபத்துவந்தாலும் ஓடிவந்து திருவடிகளிலே விழ * முப்பத்துமூவரமரர்க்கு முன் சென்று கப்பந்தவிர்க்கும் கலியெ * என்கிறபடியே அவர்களுக்காகத் தன்னை அம்புக்கிலக்காக்கி அவர்களைக் காப்பாற்றும் வலிய ரக்ஷ்கன், இப்படிப்பட்டவன் அஸுரராக்ஷஸ கோஷ்டியில் வந்தாலோ அவர்களுக்குக் கொடிய யம்னாயிருப்பன். ப்ரஸித்தனாயிருக்கிற எம்பெருமான் தேவர்களுக்கு வன் சரணாயும் அசுரர்களுக்கு வெங்கூற்றமாயும் இருந்தால் அவனுக்கு இது குறையாகாதோ? என்னில், ஆகாது. தேவர்களுக்கு நன்மை செய்யவேணும், அசுரர்களுக்குத் தீமைசெய்யவேணும் என்று எம்பெருமானுக்கு இங்ஙனே ஒரு ஆக்ரஹமில்லை, ஒருங்கே எல்லார்க்கும் நன்மை செய்யவேணுமென்பதே அவனுடைய திருவுள்ளம். எல்லாரும் உபயோகங்கொள்ளக் கல்லின ஏரியிலே கழுத்தலே கல்லைக்கட்டிக் கொண்டு விழுந்து சாவார் போலவும், விளக்கிலே விட்டில்கள் தாமேவந்து விழுந்து மடிந்து போமாபோலவும் எம்பெருமானிடத்திலும் அவரவர்களே வந்து விழுந்து மடிந்தால் இது இவனது குற்றமாகுமோ?

English Translation

The permanent refuge of the gods, the ghastly death of Asuras, protecting all the worlds below his feet and yet not thus, -the Lord of Tiru-vinnagar, refuge of the Southern Quarters, is my refuge. O My Father, My Lord, My Krishna, My Master!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்