விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரம் சுடர் உடம்பு ஆய்*  அழுக்குப் பதித்த உடம்பு ஆய்* 
    கரந்தும் தோன்றியும் நின்றும்*  கைதவங்கள் செய்தும்*  விண்ணோர்- 
    சிரங்களால் வணங்கும்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    வரம் கொள் பாதம் அல்லால் இல்லை*  யாவர்க்கும் வன் சரணே*. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரம் சுடர் உடம்பு ஆய் - அப்ராக்ருத விக்ரஹயுக்தனாயும்
அழுக்கு பதித்த உடம்பு ஆய் - ஹேய ஜகத்ரூப சரீரயுக்தனாயும்
கரந்தும் தோன்றியும் நின்றும் - மறைந்தும் வெளிப்பட்டு மிருந்தும்
கைதவங்கள் செய்தும் - வஞ்சனைகளைச் செய்தும் (இப்படிப்பட்ட தன்மைகள் திகழ)
விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் - தேவர்கள் தலைவணங்கித் தொழுமிடமான திருவிண்ணகரிலே உறையும் பெருமாடைய

விளக்க உரை

(பரஞ்சுடர்) எம்பெருமானுக்கு இரண்டு வகையான சரீரங்களுண்டு அப்ராக்ருதமாய் சுத்தஸத்வமயமான அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹம் ஒன்று, - ஜகத் ஸர்வம் சரீரம் தே. என்கிறபடியே ஸகல ஜகத்தும் அவனுக்கு சரீரமாகையாலேஇந்த ஸமஸ்த ஹேயாஸ்பத சரீரம் மற்றொன்று. கரந்தும் தோன்றியும் - * இராமடமூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும் * என்றும், * கண்காணநிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றதபடி நின்று * என்றும் (பிள்ளைலோகாசாரயர்) அருளிச்செய்கிறபடியே மறைந்திருப்பதும், * காணவாராயென்றென்ற்று கண்ணும்வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி ராமக்ருஷ்ணாதி அவதாரங்களைச் செய்வதும் விவக்ஷிதம். நின்றும் –நூறாண்டு பதினோராயிரமாண்டு நின்றும். கைதவம் – வடசொல், க்ருத்ரிமம் என்றபடி. “அவதரித்து நிற்கச் செய்தே தன்படிகள் சிசுபாலாதிகளுக்குத் தோற்றாதபடி பண்ணியும் ஆச்ரிதர்க்குத் தோற்றும்படி பண்ணியும்“ என்பது ஈடு.

English Translation

A body of exceeding radiance, a body full of filth, hiding now and coming then, faithful and deceiving, -he resides in Vinnagar worshipped by the gods. Other than his lotus feet, we have no refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்