விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மூவுலகங்களும் ஆய்*  அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்* 
    பூவில் வாழ் மகள் ஆய்*  தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்* 
    தேவர் மேவித் தொழும்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    பாவியேன் மனத்தே*  உறைகின்ற பரஞ்சுடரே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அல்லன் ஆய் - (அங்ஙனல்லாத) நித்ய விபூதியாய்
உகப்பு ஆய் முனிவு ஆய - ராகத்வேஷங்களாயும்
பூவில் வாழ் மகள் ஆய் - ஸ்ரீ மஹாலக்ஷ்மியாயும்
தௌவை ஆய் - மூதேவி யென்கிற அலக்ஷ்மியாயும்
புகழ் ஆய் பழி ஆய் - கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும்  இருந்துகொண்டு

விளக்க உரை

(மூவுலகங்களுமாய்) படைக்கப்படுதல், கருமங்களுக்கு வசப்பட்டிருத்தல், ஸத்வரஜ ஸ்தமோ குணமயமாயிருத்தல் என்கிற இவற்றாலே அவிலக்ஷணமாயிருக்கும் மூன்று லோகங்கள், இத்தன்மைகளுக்கு எதிர்த்தட்டாய்ப் பரமவிலக்ஷணமாயிருக்கும் நித்யவிபூதி, இவையெல்லாம் இவனிட்ட வழக்கென்றது. உகப்பாய் முனிவாய் – ஒரு வஸ்துவை ஒருவர் உகந்திருப்பதும், அதுதன்னையே மற்றொருவர் வெறுத்திருப்பதுமான உகப்பும் முனிவும் அவனிட்டவழக்கு ஒருவனுக்கு ஒன்றில் ஒருகால் உகப்பும் அவனுக்கே அதுதன்னிலேயே மற்றொரு கால் வெறுப்புமாதலால் அவையு மிங்குக் கொள்ளலாம். பூவில்வாழ்மகளாய்த் தௌவையாய் – லக்ஷ்மீகடாக்ஷம் பெறுவானொருத்தன், மூதேவிபிடித்துத் திரிவானொருத்தன், இவை யிரண்டும் அவனதீனம். * நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோர்ருள்தன்னாலே, காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும்வண்ணம், கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவாகன்னும்நிற்கச் சேட்டைதம்மடியகத்துச் செல்வம்பார்த்திருக்கின்றீரே, * என்கிற திருமாலையின்படியே சிலர் திருமாலைத்தொழுது உய்வதும் சிலர் தேவதாந்தர பஜனம்பண்ணி அநர்த்தப்பட்டுப் போவதும் அவனிட்ட மாயை என்றவாறு.

English Translation

As these three worlds and no them, as peace and anger, as the lotus-dame, and the wretched-dame, as praise and terrible blams, -the Lord of Tiru-vinnagar is worshipped by the gods. He is a radiant lotus-form that lives in my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்