விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கைதவம் செம்மை*  கருமை வெளுமையும் ஆய்* 
    மெய் பொய் இளமை*  முதுமை புதுமை பழமையும் ஆய்* 
    செய்த திண் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    பெய்த காவு கண்டீர்*  பெரும் தேவு உடை மூவுலகே*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கைதவம் செம்மை - கோணலும் நேர்மையுமாய்
கருமை வெளுமையும் ஆய் - கறுப்பும் வெளுப்புமாய்
மெய் பொய் - மெய்யும் பொய்யுமாய்
இளமை முதுமை - யௌவனமும் கிழத்தனமுமாய்
புதுமை பழமையும் ஆய் - நவீநத்வமும் ஜீர்ணத்தவமுமாய்க்கொண்டு

விளக்க உரை

(கைதவம் செம்மை) சிறியார் பெரியார் என்கிற வாசின்றிக்கே அனைவர்க்கும் காவலோன் திருவிண்ணகரப்ப னென்கிறார். ‘பெருந்தேவுடை மூவுலகும் அவன் பெய்த காவு‘ என்றது ப்ரஹ்மா முதல் பிபீலிகையளவாகவுள்ள ஸமஸ்த ப்ராணிவர்க்கமும் அவனுடைய ரக்ஷ்யகோடி என்கை. கைதவமாவது வக்ரத்வம். செம்மையாவது ருஜுவாயிருத்தல். சிலரிடத்தில் கோணல் தவிர வேறுகிடையாது, சிலரிடத்தில் செம்மை தவிர வேறுகிடையாது, இவை யிரண்டும் அவனிட்ட வழக்கு. கைதவமும் செம்மையுமாகிற இரண்டும் எம்பெருமானிடத்திலேயே உண்டு என்றும் கொள்ளலாம். கண்ணன் அயல் வீட்டிலே புகுந்து வெண்ணெய்த்தாழியிலே கையிட்டவாறே ••• அம்மா! ஒரு கன்றுகுட்டி சிதறி ஓடிப்போயிற்று, அது இங்கே இருக்கிறதோ வென்று தேடுவதற்காகக் கையிட்டேன்“ என்றுரைப்பது போன்றவை கைதவம். பஞ்சவடியிலே சூர்பணகைவந்து நீர் ஆர்? ராக்ஷஸபூயிஷ்டமான இந்த இடத்திற்கு நீர் வந்த்தேன்? என்றபோது •••• (இராமன் செம்மையான புத்தியை யுடையவனாதாலால் எல்லாம் உள்ளபடியே உரைக்கத் தொடங்கினான்) என்னும்படியாக அமைந்தது செம்மை.

English Translation

The doer is the colours fair and red, black and white, truth and falsehood, youth and age, the new and the old. The Lord is in Tiru-vinnagar, fortified by walls. See, he laid out this garden-world and all the good in it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்