விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ட இன்பம் துன்பம்*  கலக்கங்களும் தேற்றமும் ஆய்* 
    தண்டமும் தண்மையும்*  தழலும் நிழலும் ஆய்* 
    கண்டுகோடற்கு அரிய*  பெருமான் என்னை ஆள்வான் ஊர்* 
    தெண் திரைப் புனல்சூழ்*  திருவிண்ணகர் நல் நகரே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ட இன்பம் துன்பம் -உலகங்கண்ட ஸுகதுக்கங்களாயும்
கலக்கங்களும் தேற்றமும் ஆய் - கலக்கமும் தெளிவுமாய்
தண்டமும் தண்மையும் - நிக்ரஹமும் அநுக்ரஹமுமாய்
தழலும் நிழலும் ஆய் - வெப்பமும் தட்பமுமாய்
கண்கொள்தற்கு அரிய பெருமான் - ஒருவரால் பரிச்சேதித்து அறியமுடியாத விபூதி விஸ்தாரத்தை யுடையனாய்

விளக்க உரை

(கண்டவின்பம்) * ஐங்கருவிகண்டவின்பம் * என்கிறபடியே செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஐந்து உறுப்புகளாலும் அநுபவிக்கப்படுகிற இன்பமும் அதற்கு எதிர்த்தட்டான துன்பமும் தானேயாயிருக்கை! வைஷயிக ஸுகாபாஸங்களையே சிலர் இன்பமாக நினைக்கும்படியும் அவற்றையே சிலர் துன்பமாக நினைக்கும்படியும் செய்யுமவ னென்கை.

English Translation

As pleasure and pain, as confusion and clear thought, as punishment and forgiveness, as light and shade, -the Lord my master is hard to understand, He resides in Tiru-vinnagar, surrounded by clear waters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்