விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நல்குரவும் செல்வும்*  நரகும் சுவர்க்கமும் ஆய்* 
    வெல்பகையும் நட்பும்*  விடமும் அமுதமும் ஆய்* 
    பல்வகையும் பரந்த*  பெருமான் என்னை ஆள்வானை* 
    செல்வம் மல்குகுடித்*  திருவிண்ணகர்க் கண்டேனே*. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல்குரவும் செல்வும் - தாரித்ரியமும் ஐச்சரியமுமாய்
நரகும் சுவர்க்கமும் ஆய் - நரகமும் ஸ்வர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் - எதிரியைவெல்லுகின்ற பகையும் (அதற்கு எதிர்த்தடையான்) ஸ்நேஹமுமாய்
விடமும் அமுதமும் ஆய் - விஷமும் அமிருதமுமாய் (ஆக இப்படி)
பல்வகையும் பரந்த பெருமான் - பலவகையாக விரிந்த விபூதியையுடையனாய்

விளக்க உரை

உரை:1

(நல்குரவுஞ்செல்வும்) ஒன்றோடொன்று சேராதவற்றை யெல்லாம் தன்பக்கலிலே சேரவிட்டுக்கொண்டிருக்கிற பெருமானைத் திருவிண்ணகரிலே காணநின்றே னென்கிறார். நல்குரவு – ஏழைமை, அதற்கு எதிரானது ஐச்வரியம், இவையிரண்டுமா யிருக்கையாவது – இவை யிரண்டையும் அவரவர்களுக்கு உண்டுபண்ணவல்லவனாயிருக்கை. குசேல முனிவனை தரித்ரனாக்கினதும் தானே, செல்வனாக்கினதும் தானே, பின்னையும் தரித்ரனாக்கியதும் தானே. நரகும் சுவர்க்கமுமாய் – துக்கமே வடிவெடுத்த நரகத்திலே தள்ளுவதும் தானே, சுகமே வடிவெடுத்த சுவர்க்கத்திலே நிறுவுவதும் தானே. வெல்பகையும் நட்பும் –த்வேஷத்தை விளைப்பதும் தானே, ஸ்நேகத்தை விளைப்பதும் தானே. தன் பக்கலில் த்வேஷமுடையவர்களை ஸ்நேஹிகளாக்கிக்கொள்ளவும் வல்லன், ஸ்நேஹமுடையவர்களை த்வேஷிகளாக்கிக் கொள்ளவும் வல்லன் என்றுமாம். மஹாத்வேஷியாயிருந்த கண்டாகர்ணனை ஸ்நேஹியாக்கிக் கொண்டான், மஹாஸ்நேஹியாயிருந்த மாலிகனை த்வேஷியாக்கிக்கொண்டான், சீமாலிகனவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய் * என்ற பெரியாழ்வார் திருமொழி காண்க. வெல்பகை – ‘ஸமாதானத்தாலே மீளுமதன்றியிலே வென்றேவிடவேண்டும் பகை‘ என்பது ஈடு.

உரை:2

வறுமையும் செல்வமுமாகி, நரகமும் சுவர்க்கமுமாகி, வெல்லக்கூடிய பகையும் நட்புமாகி, விஷமும் அமுதமுமாகி, பலவகையாகவும் பரந்து பெருமானாகி என்னை ஆள்கின்றவனைச் செல்வம் நிறைந்திருக்கின்ற மக்களையுடைய திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் பார்த்தேன்.

English Translation

I see the Lord everywhere; he appears in many ways, as poverty and plenty, as heaven and hell, as bitter feud and friendship, a poison and medicine. He is my master living with affluent people in Tiru-vinnagar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்