விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆய்ச்சி ஆகிய அன்னையால்*  அன்று வெண்ணெய் வார்த்தையுள்*  சீற்ற முண்டு அழு- 
    கூத்த அப்பன் தன்னை*  குருகூர்ச் சடகோபன்* 
    ஏத்திய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்* 
    நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு*  இல்லை நல்குரவே*. (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - பண்டொருகாலத்தில்
வெண்ணெய் வார்த்தையுள் - வெண்ணெய்களவு ஸம்பந்தமான ப்ரஸ்தாவம் வந்தவளவிலே
ஆய்ச்சி ஆகிய அன்னையால் - இடைக்குலத்துகித்த யசோதை யாகிய தாயாலே
அழு கூத்தன் - அழுகையாகிற கூத்தைச் செய்தவனான
அப்பன் தன்னை - ஸ்வாமியைக் குறித்து

விளக்க உரை

(ஆய்ச்சியாகிய) இப்பதிகம் கற்றார்க்குப் பலனுரைத்துத் தலைக்கட்டுகிறது. ‘எங்கள் கோஷ்டியிலே நீ சேரவரவேண்டா‘ என்று சொல்லிக் கதவடைத்தபோது கண்ணனுக்கு உண்டான துக்கமானது * மத்துறுகடை வெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு உரலினோடிணைந்திருந்து எங்கினபடிக்கு ஒக்கும் என்று காட்டுதற்காக ‘ஆய்ச்சியாகியவன்னையாலன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழுகூத்தவப்பன்தன்னை‘ என்று விசேஷித்தது அன்று யசோதைப்பிராட்டி அழப்பண்ணினதும் அதிஸ்நேஹகார்யம், இன்று காதலிகள் அழப்பண்ணினதும் அதிப்ரணய கார்யம் என்க. வெண்ணெய் களவுகண்டதற்காகக் கட்டியடிக்க அழுதான் என்னாமல் வெண்ணெய் வார்த்தையுள் அழுதானென்று மூலம்மைந்திருக்கிற ஸ்வாரஸ்யத்தை நோக்கி ஈட்டிலே அருளிச்செய்கிறபடி பாரீர் –“ஊரிலே வெண்ணெய்களவு போயிற்று என்றார்கள், அவ்வளவிளே நாமிறே இதுக்கிலக்கு என்று அழப்புக்கான். மடம் மெழுகுவார் ஆர்? என்ன, அச்ரோத்ரியன் என்றார்கள், இப் பரப்பெல்லாம் என்னாலே மெழுகப்போமோ என்றான், அதுபோலே.

English Translation

This decad of the thousand songs sung with music by kurugur satakopan on the Lord who stole butter and was punished by the cowherd-mother, -those who mater it will be freed of poverty.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்