விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்று இலங்கு முடியினாய்!*  இருபத்தோர் கால் அரசு களைகட்ட* 
    வென்றி நீள்மழுவா!*  வியன் ஞாலம் முன் படைத்தாய்!* 
    இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய*  கருமாணிக்கச் சுடர்* 
    நின்தன்னால் நலிவே படுவோம் என்றும்*  ஆய்ச்சியோமே*.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்று இலக்கு முடியினாய் - நிலைநின்று விளங்குகிற திருவபிஷேகத்தை யுடையவனே!
இருபத்தோல் கால் - இருபத்தொரு தலைமுறை
அரசுகைளை கட்ட - அரசர்களை வேர்ப்பறியாகப் பறித்த
வென்றி நீள் மழுவா - ஜயசீலனான பெரிய மழுப்படையை யுடையவனே!
முன் வியல் ஞாலம் படைத்தாய் - முன்பு விஸ்தீர்ணமான ஜகத்தைப் படைத்தவனே!

விளக்க உரை

(நின்றிலங்கு) ப்ரணயரோஷமென்பது நெடும்போது பெருகிச் செல்லமாட்டாது, அப்படி நெடுகிச் செல்லுவது ரஸிகர்களுடைய படியுமன்று. ஊடலானது கூடலிலே மூட்டியல்லது நிற்காதாகையினால் இனிக் கூடல் தலைக்காட்டத் தொடங்கிவிட்டது. பிரானே! நீதான் வெற்றிக்கொண்டாய், நாங்கள் தோற்றோம் என்று முடிக்கிறார்கள். இங்கே இட்டு அவதாரிகை காண்மின், - “காலால் அழித்தது சிற்றிலையன்றே, இவர்கள் நெஞ்சில் மறத்தையேயிறே அந்த மறம் போனவாறே மேல்நோக்கிப் பாதாதிகேசமாகப் பார்த்தார்கள். தங்களை ஜயிக்கையாலுண்டான ஹர்ஷம் வடிவிலே தோற்றும்படி நின்றான், அவ்வடிவில்பிறந்த வேறுபாட்டைச் சொல்லுகிறார்கள். திருவபிஷேகமணிந்து நிற்பது ஜயஸூசக மாகையாலே தங்களை ஜயித்துவிட்டானென்பதைக் காட்டிக்கொண்டு நின்றிலங்குமுடியினாய் என்கிறார்கள். பிரானே! இத்ற்கு முன்னே நீ திருவபிஷேகமணிந்தது வெறும் தலைச்சுமையேகான், எமது மறத்தைப்போக்கி எங்களை வெற்றிக்கொண்ட இன்று அணிவதுதான் ஏற்றது என்று சொல்லிக்காட்டுகிறபடி. (இருபத்தோர்கால் இத்யாதி) கொழுத்துத் திரிந்து கொடுமை இயற்றிவந்த க்ஷத்ரியவம்சங்கள் பலவற்றை நாசஞ்செய்வதற்காக நாராயணமூர்த்தி பரசுராமாவதாரம் செய்திருந்தனர். (ஜமத்க்நி முனிவர்க்குக் கார்த்தவீர்யார்ஜுநனும் அவனது குமாரர்களும் ஜமதக்ரியின் ஆச்ரமத்தில் இளைப்பாறப் புகுந்தகாலத்து, அங்கே அம்முனிவனது ஹோம தேநுவானது வேண்டின வஸ்துக்களையெல்லாம் யதேஷ்டமாக அளித்துக் கொண்டிருப்பதைக்கண்ட இவர்கள் அப்பசுவைக் கொள்ளைகொள்ள விரும்பி அதனைக் கவர்ந்து அம்முனிவனையும் கொன்றிட்டார்கள். அதனால் அப்பரசுராமன் அந்த கார்த்தவீர்யார்ஜுன்னையும் அவனது குமாரர்களையுங்கொன்று அதனாலேயே க்ஷத்ரியவம்சம் முழுபதன்மேலும் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொரு தலைமுறை பொருது அழித்திட்டனன் என்பது வரலாறு. இதனை இங்கு எடுத்துரைத்தானது – மிடுக்கரான ராஜாக்களை வென்றவுனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரியபணியோ என்று குறிப்பிட்டபடி.

English Translation

O Lord of radiant crown, wielder of the axe that destroyed Kings! O Lord who made the Universe, O Lord of radiant hue! Today you have come and uplifted the cowherd-clan. Alas we cowherd-girls are pained!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்