விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குழகி எங்கள் குழமணன்கொண்டு*  கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை* 
    பழகி யாம் இருப்போம்*  பரமே இத் திரு அருள்கள்?*
    அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும்*  தேவிமை ஈதகுவார் பலர் உளர்* 
    கழகம் ஏறேல் நம்பீ!*  உனக்கும் இளைதே கன்மமே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நம்பீ - பிரானே!
குழகி - லீலாரஸம் கொண்டாடி
எங்கள் குழமணன் கொண்டு - எங்களுடைய மரப்பாச்சியை யெடுத்துக் கொண்டு
கோயின்மை செய்து - கேட்பாரற்ற செயல்களைச் செய்வதனால்
கன்மம் ஒன்று இல்லை - உனக்கு ஒரு காரியமும ஸித்தித்ததாகாது

விளக்க உரை

(குழகியெங்கள்) கீழ் “எம்குழறுபூவையொடும் கிளியோடும் குழகேலே“ என்றார்கள். அந்தப் பூவைகளும் கிளிகளும் உயிருள்ளவையாகையாலே ‘நாம் நமது தலைவிகளின் கருத்துக்கு இணங்க வர்த்க்கவேணும்‘ என்று தெரிந்துகொண்டு கனகககண்ணபிரான் கையின் பிடிகொடாமே அப்பால் சென்றுவிட்டான, அசேதனங்களான சில லீலோபகரணங்கள் அங்குக்கீழே விழுந்துகிடந்தன, அவற்றைக் கண்ணபிரான் எடுத்துக்கொண்டு சில விலாஸ சேஷ்டிதங்களைச் செய்ய ஆரம்பித்தான், அதற்குமேலே வார்த்தைகள் பெருகிச்சென்றன, “கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி” “பந்துபறித்துத் துகில்பற்றிக்கீறிப் படிறன்படிறுசெய்யும்“ என்னும்படியான கேட்பாரற்ற செய்கைகளைச் செய்யவும் தொடங்கினான், அதுகண்டு “குழகியெங்கள் குழமணன்கொண்டு கோயின்மைசெய்து கன்ம்மொன்றல்லை“ என்கிறார்கள். கோயின்மை – கோ-இன்மை, அரசனில்லாமை என்று சப்தார்த்தம், அராஜகமான செய்கை என்பது கருத்து.

English Translation

No use pretending to repent, pray do not play with our dolls. We are familiar with these favours, we do not deserve them. There are many fair damsels worthy of queen ship. Sire, do not ascend our fold, this is childishness, unbecoming of you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்