விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கழறேல் நம்பீ!*  உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும்*  திண் சக்கர- 
    நிழறு தொல் படையாய்!*  உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்* 
    மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க*  எம்- 
    குழறு பூவையொடும்*  கிளியோடும் குழகேலே*.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நம்பீ கழறேல் - பிரானே! மேலிட்டு வார்த்தைசொல்வதை எங்களிடம் வைத்துக்கொள் வேண்டா!
உன் கைதவம் -உனது கபடங்களை
மண்ணும் விண்ணும் நன்கு அறியும் - உபய விபூதியும் நன்றாக அறியும்
நிழறு - இஷ்டப்படி நடத்தப்பெறுகிற
திண் சக்கரம் தொல்படையாய் - திண்ணிய சக்கரமாகிற அநாதியான ஆயுதத்தை யுடையவனே!

விளக்க உரை

(கழறேல்நம்பி) கீழே ‘எம்மைநீ கழறேலே‘ என்று மறுத்துக் கூறினவளவிலும், கண்ணபிரான், ‘நங்காய்! கொய்யென்பதைக் கனவிலுமறியாத வென்னை நீ பச்சைப் பசும் பொய்யனாக எண்ணி இப்படி திரஸ்கரித்துத் தள்ளுவது தகுதியன்று, மத்யஸ்தர்களை வைத்துக்கொண்டு நான் மெய்யனோ பொய்யனோ வென்பதை நிர்ணயிக்கவேண்டுமத்தனை‘ என்று சொல்லிக்கொண்டு மீண்டும் மேலிட்டு வார்த்தைசொல்ல, “கழறேல் நம்பீ! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும்“ என்கிறாள். நிர்யணம்பெறாத விஷயத்திற்கன்னோ மத்யஸ்தர்களை வைத்துக்கொண்டு ஸாக்ஷிகளை விசாரித்துக்கொண்டும் தடுமாறவேண்டுவது, உன்னுடைய ஸங்கதி உபயவிபூதியிலும் ப்ரஸித்தமன்றோ? (கைதவமாவது – மாயச்செயல், இது வடசொல்) நீ லஞ்சகம் செய்வது இம்மண்ணுலகில் மாத்தரமேயோ? விண்ணுலகிலும் ப்ரஸித்தமன்றோ அது. “சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபந்தராநிற்கவேயங்கு, ஒர்மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப்போந்து இமிலேற்று வன்கூன்கோட்டிடையாடினைகூத்து அடலாயர்தம் கொம்பினுக்கோ“ என்கிற திருவிருத்தப் பாசுரத்தின் பொருள் இங்கே அநுஸந்திக்கத்தக்கது.

English Translation

O Sire, do not lie! Men and gods know your deceits. Lord of radiant discus, let me teach you something. Exuberant sweet-tongued damsels will always worship your grace. Pray do not play with our dumb mynahs and parrots.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்