விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்*  முன்பு நான் அது அஞ்சுவன்* 
    மன்உடை இலங்கை*  அரண் காய்ந்த மாயவனே* 
    உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்*  இனி அதுகொண்டு செய்வது என்? 
    என்னுடைய பந்தும் கழலும்*  தந்து போகு நம்பீ!*. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மின் உடை இலங்கை - அரசனையுடைத்தா யிருந்த லங்காபுரியினுடைய
அரண் - கோட்டைகளையெல்லாம்
காய்ந்த - சீறியழித்த
மாயவனே - ஆச்சரியசேஷ்டிதங்களை யுடையவனே
நம்பி - ஸகலருணபரிபூரணனே!

விளக்க உரை

*- (மின்னிடைமடவார்கள்) இப் பாசுரத்தில் “என்னுடைய பந்துங்கழலும் தந்துபோகு நம்பீ!“ என்றிருக்கையாலே பந்தும் கழலுமாகிற சில லீலோபகரணங்கள் எம்பெருமான் கையில் இருப்பதாகவும் அவற்றைப் பராங்குச நாயகி அபேக்ஷிப்பதாகவும் தெரிகிறது. பந்து கழல்கள் எம்பெருமான் கையில் இருக்கக் காரணமென்னென்னில், இதற்கு முன்னே இவளும் தானுமாக லீலைகள் செய்துகொண்டிருந்தார்கள். அப்படியிருக்கையில் திடீரென்று பிரிந்து போனான், போனவன் சிறிதுகாலம் கழித்து மீண்டு வந்துநின்றான். அப்போது நாயகிக்கு ப்ரணயரோஷம் தலையெடுத்திருந்ததனால் பேசாதே கிடந்தாள். எப்படியாவது இவளைப் பேச்சு செய்யவேணுமென்று கருதிய அவன் பல விலாஸ சேஷ்டிதங்கள் செய்து பார்த்தும் ஒன்றும் அவற்றிலேயே அளவுகடந்த அபிநிவேசம் வாட்டினான், பந்தே! நாயகிதான் பேசாவிட்டாலும் நீயாவது என்னோடு பேசுவாயன்றோ, கழலே! நாயகியின் கழல் எனக்குக் கிடைக்காவிட்டாலும் நீயாவது கிடைத்தாயன்றோ? என்றிப்படிப் பலவுஞ் சொல்லித் தன்னுடைய வியாமோஹாதிசயத்தை வெளிக்காட்டத் தொடங்கினான், அப்போது நாயகி பேசாதிருக்க முடியாமல் பேசத் தொடங்கி இங்ஙனே கூறுகின்றாளென்க.

English Translation

O Lord who destroyed the fortress of Lanka! Thin-waisted damsels will worship your grace. I fear what may follow. I know your tricks, what can you do with them now? Sire, return my bat and ball and leave!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்