விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்*  வெறி வண்டினங்காள்* 
    தேறு நீர்ப் பம்பை*  வடபாலைத் திருவண்வண்டூர்* 
    மாறு இல் போர் அரக்கன்*  மதிள் நீறு எழச் செற்று உகந்த* 
    ஏறு சேவகனார்க்கு*  என்னையும் உளள் என்மின்களே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெறி வண்டு இனங்காள் - பரிமளம் மிக்க வண்டினங்களே!
உம்மை வேறு கொண்டு - உங்களிடத்திலே விலக்ஷணப்ரதிபத்தி பண்ணி
யான் இரந்தேன் - அடியேன் ஒன்று
தேறு நீர் பம்பை வடபால் திருவண்வண்டூர் - தெளிந்தநீரையுடைய பம்பையாற்றின் வடபக்கத்திலுள்ள தான திருவண்வண்டுரிலே (எழுந்தருளியிருக்கின்ற)
மாறு இல் போர் அரக்கன் - நிகரற்ற யுத்தம் செய்வதில்வல்லவனான இராவணனுடைய

விளக்க உரை

(வேறுகொண்டும்மை) சிலவண்டுகளைக் குறித்துக் கூறுகின்றாள். “எமது தலைவர் பெண்பிறந்தார் காரியமெல்லாம் செய்து தலைக்கட்டி விட்டோமென்றிரப்பர், அப்படியன்றிக்கே, ரக்ஷ்யவர்க்கத்திலே நானு மொருத்தி யிருக்கின்றதாகச் சொல்லுங்கோள்“ என்கிறாள். கீழே பலபறவைகளையும் நோக்கித் தூதுபோம்படி நான் இரந்ததுண்டாகிலும் இப்போது, வண்டுகளான உங்களை இரப்பது ஸாமான்யமானதன்று! தனிப்பட்ட ப்ரதி பத்தியோடே உங்களை இரக்கிறேனென்பாள் “வேறு கொண்டும்மையானிரந்தேன்“ என்கிறாள். “திக்குக்கள்தோறும் முதலிகளைப் போகவிடாநிற்கச் செய்தே திருவடிகையிலே திருவாழிமோதிரம் கொடுத்துவிட்டாப்போலே காணும்“ என்பது ஈடு. (விசேஷேணது ஸுக்ரீவோ ஹநூமத்யர்த்தமுக்தவாந், ஸ ஹி தஸ்மிந் ஹரிச்ரேஷ்டே நிச்சிதார்த்தோர்த்தஸாத நே) என்ற வால்மீகிவசனமும். இப்பாசுரத்தில் “அரக்கன் மதிள் நீறெழச் செற்றகந்த ஏறு சேவகனார்க்கு“ என்றதை அடியொற்றிய இத்திருவாய்மொழி விபவத்தில் விட்ட தூது என்று ஆசாரியர்கள் நிர்வஹித்தருள்வது. என்னையுமுள்ளென்மின்கள் – இன்னமும் பிழைத்திருக்கிறெனெறு சொல்லுங்கோல் என்றும் பொரள் கொள்ளலாமாயினும் அப்பொருளில் சுவையில்லையென்பது பெரானார் திருவுள்ளம்

English Translation

O Fragrant bees, I Pray you, because you are different Tiruvan-Vandur is on the Northern banks of the Pampa river. The Lord who burnt to dust the high-walled Lanka resides there. Pray tell him I too exist.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்