விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடிகள் கைதொழுது*  அலர்மேல் அசையும் அன்னங்காள்* 
    விடிவை சங்கு ஒலிக்கும்*  திருவண்வண்டூர் உறையும்* 
    கடிய மாயன் தன்னை*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
    கொடிய வல்வினையேன்*  திறம் கூறுமின் வேறுகொண்டே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அலர் மேல் அசையும் அன்னங்காள் -பூவின் மேலேயிருந்து உலாவுகின்ற அன்னங்களே!
விடிவை - ஸுப்ரபாதகாலத்திலே
சங்கு ஒலிக்கும் - சங்கு முழங்கப்பெற்ற
திரு வண்வண்டூர் - திருவண்வண்டூரிலே
உறையும் - எப்போதும் வாழ்கின்ற

விளக்க உரை

(அடிகள் கைதொழுது) சில அன்னப்பறவைகளை நோக்கி ‘திருவண்வண்டூரெம் பெருமானிடத்துச்சென்று ஏகாந்தமாக என் விஷயம் விஜ்ஞாபிக்கவேணும்‘ என்று இரக்கிறாள். ‘திருவடிகளைச் சிக்கனப்பிடித்துக் கொண்டு‘ என்று சொல்லவேண்டிய ஸ்தானத்திலே அடிகள் கைதொழுது என்கிறாள். இது உபசாரோக்தி. “அநதிக்ரமணீயம் ஹி சரணக்ரஹணம்“. “என்றபடி திருவடிகளைப்பிடித்துக் கொண்டால் மறுக்கப்போகாதாகையாலே அந்த உபாயத்தை உபதேசித்தபடி. கடியமாயன் – ஆச்ரிதவிரோதிகளை அழியச் செய்யுமிடத்தில் கண்பாரத ஆச்சரியச் செயல் செய்பவன். கண்ணன் – ஆச்ரிதர்க்குதான் கையாளாக நின்று தன்னைக்கொடுக்குமவன். நெடுமால் – இத்தனையும் செய்தும் “அந்தோ! ஒன்றும் செய்யப்பெற்றிலோமே! என்று குறைபடும்படியான வியாமோஹமுடையவன்,

English Translation

O Dainty swans dallying over flowers! My Lord resides in Tiruvan-Vandur where conches herald the day, My Krishna, the ancient Lord is swift. Pray talk to him alone, worship his feet and tell him of my plight.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்