விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய்*  ஒண் சிறு பூவாய்* 
    செருந்தி ஞாழல் மகிழ்*  புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்*
    பெரும் தண் தாமரைக்கண்*  பெரு நீள் முடி நால் தடந்தோள்* 
    கருந் திண் மா முகில் போல்*  திருமேனி அடிகளையே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒண் சிறு பூவாய் - அழகிய சிறிய வடிவையுடைய பூவையே!
செருந்தி நாழல் மகிழ் புன்னை சூழ் - சுரபுன்னை, ஞாழல் மகிழமரம், புன்னை மரம் ஆகிய இவற்றால் சூழப்பட்ட
தண் திருவண்வண்டூர் - குளிர்ந்த திருவண்வண்டூரிலே (எழுந்தருளியிருக்கின்ற)
பெரு தண் தாமரை கண் - பெரிய தண்டாமரை போன்ற திருக்கண்களையுடையவரும்
பெரு நீள் முடி - மிகப்பெரிய திருவபிஷேகத்தையுடையவரும்

விளக்க உரை

(திருந்தக்கண்டு) திருவண்வண்டூரிலே சென்று அங்குறையும் எம்பெருமானுடைய திவ்யாவயவ் ஸௌந்தர்யத்தை நன்றாகக் கண்டு மீண்டுவந்து எனக்கொன்று சொல்லவேணுமென்று பூவைப் பறவையைக்குறித்துச் சொல்லுகிறாள். காண்பது இரண்டு விதம், தன் மணத்துக்கு மாத்திரம் தெரிந்தாம்படி காண்கை ஒன்று, பிறர்க்கும் விசதமாகச் சொல்லலாம்படி காண்கை மற்றொன்று. இங்கே திருந்தக் கண்டு என்ற – ஏதோ சாதாரணமாகக் கண்டு விடுகையன்றிக்கே எனக்கு விசதமாகச் சொல்லலாம்படி காணவேணுமென்றவாறு. எதைக் காண்பது? என்ன, திருக்கண் திருவபிஷேகம் திருத்தோள்கள் திருமேனி ஆகிய இவற்றைக் கண்டு அவற்றிலுள்ள அதிசயங்களை வந்து சொல்லவேணுமென்கிறாள். தூதர் செய்யவேண்டிய காரியங்களில் இதுவும் ஒன்றேயாம், இதனாலும் தலைவிக்குக் தரிப்பு உண்டாகுமென்க. அடிகள் என்று ஸ்வாமிக்கு வாசகம்.

English Translation

O Beautiful Puvai bird, speak to my Lord and come back to me! He lives in Vandur filled with Punnai, serundi, Nalai, Kurukkatti and Magil flowers. He ha large lotus eyes and four mighty arms, and a dark cloud-hue. He wears a tall radiant crown.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்