விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற*  அரசர்கள்தம்முகப்பே* 
    நாழிகைபோகப்படைபொருதவன்*  தேவகிதன்சிறுவன்*
    ஆழிகொண்டு அன்றுஇரவிமறைப்பச்*  சயத்திரதனதலையை*
    பாழிலுருளப்படைபொருதவன்*  பக்கமேகண்டார்உளர். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூறிவிட்டு - பங்கிட்டுக்கொண்டு
காத்துநின்ற -  (ஜயத்ரதனைக்) காத்துக் கொண்டிருந்த
அரசர்கள் நம் முகப்பே - ராஜாக்கள் முன்னிலையில்
நாழிகை போக - (பகல் முப்பது) நாழிகையும் போயிற்றென்று தோற்றும்படியாக
படை - (தன்) ஆயுதமாகிய திருவாழியாழ்வானைக் கொண்டு

விளக்க உரை

அர்ஜுநன் பதின்மூன்றநாட் போரில் தன் மகனான அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை ‘நாளை அஸ்தமிப்பதற்கு முன்னே கொல்லாவிடின் தீக்குளித்து உயிர்விடுவேன்’ என்று ப்ரதிஜ்ஞைபண்ண, அதற்கு இடமறும்படி புருஷப் பிரமாணமன்றியே தீர்க்கனான அவனை ஒரு புருஷப்பிரமாணமாகக் குழிக்குள்ளே நிறுத்தி ‘நீங்கள் இத்தனை நாழிகை காத்துக் கொள்ளுங்கோள்; நாங்கள் இத்தனை நாழிகை காத்துக் கொள்ளுகிறோம்’ என்று விபாகம் பண்ணிக் கொண்டு, பகல்முப்பது நாழிகையும் அவனுக்கு ஒருநலிவு வராதபடி காத்துக்கொண்டுநின்ற அதிரத மஹாரதரான துரியோதநன் முதலிய ராஜாக்கள் முன்னே கண்ணபிரான், அர்ஜுநனுடைய சபதம் பொய்த்துவிடுமேயென்று சிந்தித்து, ஸூர்யாஸ்தமயமாவதற்குச் சில நாழிகைக்கு முன்னமே பகல்நாழிகை முப்பதுஞ் சென்றதாகத் தோற்றும்படி, நினைவறிந்து காரியஞ்செய்யுந் தனது திருவாழியைக்கொண்டு ஸூர்யனை மறைக்க, அதனால் எங்கும் இருளடைந்த பொழுது அர்ஜுநன் அக்நிப்ரவேசஞ் செய்தலைக் களிப்புடனே காணுதற்குச் சயத்ரதனைக் குழியில் நின்றும் அவர்கள் கிளப்பி நிறுத்தினவளவிலே இருள் பரப்பின திருவாழியைக் கண்ணபிரான் வாங்கிவிட, பகலாயிருந்ததனால் உடனே அர்ஜுநன் ஜயத்ரதனுடைய தலை பாழியிற் கிடந்துருளுமாறு அம்பாலே பொருதனன் (தலைதுணித்தனன்) என்பது இப்பாட்டிற் குறித்த வரலாறு. “மாயிரு ஞாயிறு பாரதப்போரில் மறைய அங்ஙன், பாயிருள் நீ தந்ததென்ன கண்மாயம்!” என்ற திருவரங்கத்துமாலையுங் காண்க.

English Translation

Devaki’s son Krishna fought all day long against the king who took turns guarding their only ally Jayadratha. If you are in search of him, there are many who saw him by Arjuna’s said there he hid the son with his discus, when Arjuna rained arrows that rolled Jayadratha’s head into a pit.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்