விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒருவண்ணம் சென்று புக்கு*  எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே* 
    செரு ஒண் பூம் பொழில் சூழ்*  செக்கர் வேலைத் திருவண்வண்டூர்* 
    கரு வண்ணம் செய்யவாய்*  செய்ய கண் செய்ய கை செய்யகால்* 
    செரு ஒண் சக்கரம் சங்கு*  அடையாளம் திருந்தக் கண்டே*.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒண் கிளியே - அழகிய கிளியே!
செரு- ப்ரணயகலஹாஸ்
ஓண் பூ பொழில் சூழ் - அழகியபூஞ் சோலைகளாலே சூழப்பட்டதும்
செக்கர் வேலை- செந்நிறமான பக்கப் பிரதேசங்களையுடையதுமான
திருவண்வண்டூர் - திருவண்வண்டூரிலே

விளக்க உரை

(ஒரு வண்ணம்) ஒருகிளியை விளித்து அவனுடைய அடையாளங்களைச் சொல்லி இவ்வடையாளப்படியே அவனை அழகிதாகக் கண்டு எனக்காக அவனுக்கொரு வார்த்தை அறிவியுங்கோளென்கிறாள். ஒரு வண்ணம் சென்றுபுக்கு – இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி –“இதுக்கு இரண்டுபடியாக அருளிச் செய்வர், இத்தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே போர முதலிகளாயிருப்பர், மேன்மேலனப் பிரம்புகள் விழும், அத்தைப் பொறுத்துப் போய்ப் புகுங்கோள் அன்றியே, வழி நெஞ்சையபஹரிக்கும் போக்யதையையுடைத்து, அதில் கால்தாழாதே வருந்தி ஒருபடி சென்றுபுக்கு.“ என்பதாம். எம்பெருமான் ஸௌசீல்யமே வடிவெடுத்தவனாயினும் பரத்வம் பாரட்டி நிற்பது முண்டாகையாலே அதற்கேற்ப அருகே அணுகவொண்ணாதபடி நேரவுங்கூடும், அப்படி நேர்ந்தாலும் அதை ஒருவாறு ஸஹித்துக்கொண்டு உள்ளே புகுங்கோள் என்பது முற்பொருள். மலைநாடாகையாலே வழியெல்லாம் பூவியில் பொழிலும் தடமுமாயிருக்கும், அவற்றிலே கண் செலுத்தினால் ஆங்காங்கு லயிக்கவேண்டிற்றாகுமேயல்லது எம்பெருமானிடம் சென்று சேரமுடியாது, ஆகவே வழியில் கண் செலுத்தாதே ஒருவாறு வழியைக் கடந்து போங்கள் என்பது இரண்டாவது பொருள்.

English Translation

O Beautiful parrot, go this once, then speak your good words! Flower groves and red shores surround Tiruvan-Vandur. The Lord has a dark hue, red lips, lotus eyes and lotus feet. Discus and conch are his identification marks.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்