விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    போற்றி யான் இரந்தேன்*  புன்னைமேல் உறை பூங் குயில்காள்* 
    சேற்றில் வாளை துள்ளும்*  திருவண்வண்டூர் உறையும்* 
    ஆற்றல் ஆழி அங்கை*  அமரர் பெருமானைக் கண்டு* 
    மாற்றம் கொண்டருளீர்*  மையல் தீர்வது ஒருவண்ணமே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புன்னை மேல் உறை புன்னை மரங்களின மேலே வாழ்கிற
பூ குயில்காள் அழகிய குயில்களே!
யான் அடியேன்
போற்றி இரந்தேன்துதித்து வேண்டுகின்றேன்,
வாளை வாளை மீன்களானவை சேற்றில் துள்ளும்

விளக்க உரை

(போற்றியானிரந்தேன்) சில குயில்களைக்குறித்து, திருவண்வண்டூரிலே சென்று எம் பெருமானைக்கண்டு எனக்குள்ள நிலைமை அறிவித்து அத்தலையில் நின்றும் ஒரு வார்த்தை என்பதை “போற்றியாம் வந்தோம்“ என்றவிடத்திற்போல வினையெச்சமாகக் கொண்டால் ‘மங்களாசாஸனம் பண்ணி‘ என்று பொருளாய், மேலே இரந்தேனென்பதில் அந்வயிக்கிறது. அங்ஙன்னறிக்கே * அன்றிவ்வுலகமளந்தாபடி போற்றி * என்றவிடத்திற்போலே கொண்டால் ‘மங்களமுண்டாகுக‘ என்று பொருள்பட்டுத் தனியேநிற்கும். வடமொழியில் ‘ஸவஸ்தி‘ என்று முதலிட்டுப்பேச ஆரம்பிப்பது போலாமிது. யான் இரந்தேன் – தூது போகவேணுமென்று இரப்பவன் அவனென்று ஸ்ரீராமயணாதிகளில் ப்ரஸித்தமாயிருக்க, இப்போது நான் இரக்கும்படியாவதே! என்கிற அவஸாதம் தோன்றும். புன்னைமேலுறை பூங்குயில்காள்! –“வளர்த்ததனால் பயன் பெற்றேன்“ என்னும்படியாக ஆசிரியர் பக்கலிலேயே வளருமவர்கள் (ஸ்வாபதேசத்தில்) குயிலாகச் சொல்லப்படுபவர்கள். –வநப்ரிய பரப்ருக கோகில் பிக * என்கிற அமரகோசத்தின்படி குயில்களுக்கு வடமொழியில் பரப்ருத மென்றுபெயர், காக்கையின் கூட்டிலே கொண்டுவிடப்பெற்று அவற்றால் போஷிக்கப்பட்டு வளரும் குருகுலவாஸிகளைச் சொல்லிற்றாகிறது.

English Translation

O Punnai-dwelling koels, I beg of you, please! The Lord of gods with a discus in his radiant hand resides in Tiruvan-Vandur where fish jump in watered fields. Go ask him for a reply, and rid me of my swoon.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்