விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இடர் இல் போகம் மூழ்கி*  இணைந்து ஆடும் மட அன்னங்காள்!* 
    விடல் இல் வேத ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 
    கடலின் மேனிப்பிரான்*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
    உடலம் நைந்து ஒருத்தி*  உருகும் என்று உணர்த்துமினே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இடல் இல் - பிரிந்துபடும் துக்கமில்லாத
போகம் மூழ்கி - இன்பத்தில் அவகாஹித்து
இணைந்து ஆடும் - கலந்து வாழ்கின்ற
மடம் அன்னங்காள் - மடமைதங்கிய அன்னங்களே!
விடல் இல் - இடைவீடில்லாத

விளக்க உரை

(இடலில்போகம்) ஒரு நொடிப்பொழுதும் பிரியாமே இடைவீடின்றிக் கலந்து வாழ்கின்ற அன்னப்பறவைகளை நோக்கி, திருவண்வண்டூரிலே நிரந்தரமாக நடைடிபறும் வேதவொலியைத் திருச்செவி சார்த்திக்கொண்டு அங்கே கால்தாழ்ந்து வர்த்திக்கிற கடல்வண்ணனான பெருமானைக்கொண்டு என்பேரைச்சொல்லாதே ஒருத் உடல்நைந்து உருகுகின்றாளென்று சொல்லுங்கோளென்கிறாள். ••• என்னும் வடசொல் போகமெனத்திரிந்த்து. போகத்திற்கு இடராவது இடையிடையில் விச்சேதப்ரஸக்தியாம். அஃதில்லாத போகத்தில் மூழ்கியென்றது. ஸ்வாபதேசத்தில் இடைவிடாத பகவதனுபவத்திலே அவகாஹித்திருக்கிறபடியைச் சொன்னவாறு. போகத்தில் வழுவாத புதுவையர்கோன் என்றாற்போல். இணைந்து ஆடும் –“குரு சிஷ்யக்ரந்த விரோதங்களைப் பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ்சொல் செந்தமிழ் இன்கவி பரவியழைக்குமென்று அந்யோந்யம் கொண்டாடிப் பேசிற்றே பேசும் ஏக்கண்டர்“ எறு ஆசாரிய ஹ்ருதயத்திலருளிச்செய்தபடியே ஆசாரியர்களுக்குண்டான வேதகோஷமே உங்களுக்கு வழிகாட்டுமென்றவாறு.

English Translation

O Swan-pair, forever enjoying a dip together! The ancient Lord of celestials, my ocean-hued Krishna resides inTiruvan-Vandur amid echoes of Vedic chants, Pray tell him that a maiden pines for him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்