விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திறங்கள் ஆகி எங்கும்*  செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்* 
    சிறந்த செல்வம் மல்கு*  திருவண்வண்டூர் உறையும்* 
    கறங்கு சக்கரக் கைக்*  கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    இறங்கி நீர் தொழுது பணியீர்*  அடியேன் இடரே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திறங்கள் ஆகி -திரள்திரளாக
எங்கும் - பார்த்தவிடமெல்லாம்
செய்களூடு -விளைநிலங்களிலே
உழல் - உலாவுகின்ற
புள் இனங்காள்- பறவைக் கூட்டங்களே!

விளக்க உரை

(திறங்களாகி) பக்ஷிகள் கூட்டங்கூட்டமாக உலாவுவது வழக்கம். அங்ஙனே கூட்டமாக அவை இருப்பது தன் காரியம் செய்த்தற்காகவேயென்று பராங்குச நாயகியின் கருத்துப்போலும். அவை செய்களூடு உழல்வது தங்கட்கு இரை தேடுகைக்காகவாகி வாகக் கருதி, பறவைகளா! செய்களூடு எதற்காக உழல்கின்றிர்கள்? எனக்காக நீங்கள் தேடும் எம்பெருமான் திருவண்வண்டூரிலன்றோ உறைகின்றான் என்கிறாள். “அவன் உன்னைமறந்து அங்கே உறைவதற்கு யாதுகாரணம்? என்று பறவைகட்கு நினைவாக, சிறந்த செல்வம்மல்கு திருவண்வண்டூர்“ என்கிறார். அத்தலத்துள்ள செல்வச்சிறப்பானது அவனை அங்கே கால்தாழப்பண்ணிற்று என்றவாறு. (கறங்கு சக்கரமித்யாதி.) விரோதிகளை நிரஸிக்கவேண்டின விரைவாலே சுழன்று வாராநின்றுள்ள திருவாழியைத் திருக்கையிலே உடையவனாய், புன்முறுவல்தோன்ற நின்ற அதாத்தையுடையவனான எம்பெருமானைக்கண்டு தாழவிழிந்து வணங்கி என்னுடைய விரஹ வேதனையைத் தெரிவியுங்கள்.

English Translation

O Flocking feathered friends, picking in the fields! The berry-lipped lord with a spinning discus lives in Tiruvan-Vandur with enormous Wealth. Go worship him with reverence, and tell him of my woes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்