விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வைகல் பூங் கழிவாய்*  வந்து மேயும் குருகினங்காள்* 
    செய் கொள் செந்நெல் உயர்*  திருவண்வண்டூர் உறையும்* 
    கை கொள் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    கைகள் கூப்பி சொல்லீர்*  வினையாட்டியேன் காதன்மையே*. (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வைகல் - எப்போதும்
பூ கழி வாய் - அழகிய நீர்நிலத்திலே
வந்து மேயும்- வந்திருந்து இரையுண்கிற
குருகு இனங்காள்- கொக்கின் கூட்டங்களே!
செய் கொள் செந்நெல் உயர் - கழனி நிரம்பிய செந்நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கப்பெற்ற

விளக்க உரை

வைகல் பூங்கழிவாய்) திருவண்வண்டூரிலே சென்று எம்பெருமானுக்கு என் அபிநிவேசத்தைத் தெரிவியுங்கோளென்று சில குருகுகளை நோக்கி இரக்கின்றாள் பராங்கு சநாயகிகாள்“ என்று விளிக்கின்றாள். கடலையடுத்த நீர்ப்பரப்புக்குக் கீழ் யென்று பெயர், பூங்கழியென்று – மநோஹரமாயிருக்குந்தன்மை சொல்லுகிறது. வாய் – ஏழனுருபு. கழியிலே யென்றபடி. வைகல் வந்து மேயும் – எப்போதும் நீங்கள் உங்களுடைய உண்வை மாத்திரமேயோ நோக்குவது பிறர்காரியமும் சிறிது செய்யவேண்டாவோ என்று காட்டுகிறபடி. எம்பெருமான் என் கைக்கு எட்டாதே போனானாகிலும் அவனைப் பெறுவிக்கும்வர் இதுவொரு சந்தோஷம் என்று காட்டுகிறபடியுமாம். குருகினங்காள் – “தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே“ என்கிறாப்போலே நீங்கள் துணைபிரியாதே வாழ்கிற இவ்வாழ்ச்சி என் காரியம் செய்வதற்காகவே யென்றிருக்கிறேன் என்று தெரிவிக்கிறபடி.

English Translation

O Flocking egrets picking worms in my flowery marshes! My berry-lipped Lord with discus in hand, resides in beautiful prosperous Tiruvan-vandur, where paddy grows tall. Go tell him with folded hands my sad tale of love.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்