விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாகு அணைமிசை நம் பிரான்*  சரணே சரண் நமக்கு என்று*  நாள்தொறும்- 
    ஏக சிந்தையனாய்க்*  குருகூர்ச் சடகோபன் மாறன்* 
    ஆக நூற்ற அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்* 
    மாக வைகுந்தத்து*  மகிழ்வு எய்துவர் வைகலுமே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாகணை மிசை நம் பிரான் சரணே நமக்கு சரண் என்று - சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று
நாள் தொறும் ஏக சிந்தையன் ஆண் - ஸ்திரமான ஆத்யவஸாயத்தை யுடையராய்க் கொண்டு
குருகூர் சடகோபன் மாறன் - ஆழ்வார்
ஆக - தாம்ஸத்தைபெறுவதற்கு
நூற்ற - அருளிச் செய்த

விளக்க உரை

(நாகணைமிசை.) இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலனாகப் பரமபதத்தில் ப்ரஹ்மாந்த ப்ராப்தியை அரளிச் செய்கிறார். சரணம் புகுந்தவர்களை எம்பெருமான் உபேக்ஷிக்க நினைத்தாலும் உபேக்ஷிக்க வொட்டாதே விஷயீகரிக்கப்பண்ணுமியல்லினன் திருவனந்தாழ்வான்; அன்னவன் மீது கண் வளர்ந்து அடியார்களுக்கு உபகாரகனாயிருக்கு மெம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று இடையறாத அத்யவஸாயம் கொண்டவரான ஆழ்வார் தாம்ஸத்தை பெறுதற்காக அருளிச்செய்த ஆயிரத்திலும் இப்பத்தும் கற்றவர்கள், குணங்களை நினைத்துச் சிதிலராகாமே தரித்து நின்று நித்யாநுபவம் பெறும் பரமபதத்திலே வாழப்பெறுவர்களென்றாராயிற்று. மஹாகம் என்னும் வடசொல் மாக மென்று விகாரப்பட்டது. நம்- ஆகாசம்; மஹாகம்- பரமாகாசம், இது பரமபதத்திற்கு மறுபெயர்.

English Translation

This decad of the Andadi of thousand songs by kurugur satakopan, worshipping everyday with single mind the feet of the serpent-couch, Lord as sole refuge, -those who can sing it will enjoy high Vaikunta forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்