விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூடி நீரைக் கடைந்த ஆறும்*  அமுதம் தேவர் உண்ண*  அசுரரை- 
    வீடும் வண்ணங்களே*  செய்து போன வித்தகமும்* 
    ஊடு புக்கு எனது ஆவியை*  உருக்கி உண்டிடுகின்ற*  நின் தன்னை- 
    நாடும் வண்ணம் சொல்லாய்*  நச்சு நாகு அணையானே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நஞ்சு நாகம் அணையானே - சேஷசயனனே
கூடி நீரை கடைந்த ஆறும் - தேவாசுரர்களோடு கூடித் திருப்பாற் கடலைக் கடைந்தபவும்
அமுதம் தேவர் உண்ண - அம்ருதத்தைத் தேவர்கள் பூஜிக்க
அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் -
அசுரர்கள் அந்த அம்ருதத்தை விடும்படியாக ஸ்த்ரீ வேஷபரிச்சலும் பண்ணிப்போன விஸ்மயரீயாகாரமும்
ஊடுபுக்கு - உள்ளே புகுந்து

விளக்க உரை

(கூடிநீரை.) அமரர்களுக்கு அமுதங்கொடுக்கக் கடல்கடைந்த செய்தியிலே எனது நெஞ்சு உருவாகின்றது; உன்னை நிலைநின்று அநுபவிக்கம்படி யருளிச்செய்ய வேணுமென்கிறார். அஸுரர்களோடே கூடி நின்று உடலைக் கடைந்தருளினபடியும், அதின் பலனான அம்ருதத்தைத் தேவர்கள் புஜிக்க, அஸுரர்கள் அதிலே ஆசையறும்படியாக ஒருவடிவை (அதாவது, மோஹிநிரூபத்தை)க் கொண்டு போந்தபடியும் உள்ளே புக்கு என்னாத்மாவை யுருக்கி முடிக்கின்றன; திருவனந்தாழ்வான் உன்னோடு நித்யஸம்ச்லேஷம் பண்ணுமாபோலே நான்தரித்து நின்று உன்னைப் பூர்ணமாக அநுபவிக்கும் விரகு சொல்லவேணு மென்றாராயிற்று.

English Translation

The way you joined in the churning of the ocean for ambrosia, the tricks you played to help the gods leaving out the Asuras, -these enter my heart and melt my soul. O Lord on the poisonous snake-couch, tell me how I may seek you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்