விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடியை மூன்றை இரந்த ஆறும்*  அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்- 
    முடிய*  ஈர் அடியால்*  முடித்துக்கொண்ட முக்கியமும் *
    நொடியுமாறு அவை கேட்கும்தோறும்*  என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்* 
    கொடிய வல்வினையேன்*  உன்னை என்றுகொல் கூடுவதே?*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மூன்று அடியை இரந்த ஆறும் - (மாவலியிடத்தே) மூவடி நிலத்தை யாசித்தபடியும்
அங்கு நின்றே - யாசித்த அவ்விடத்தில் நின்று கொண்டே
ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய - ஆழ்ந்தகடல்களையும் மண் விண்ணுலகங்களையுமெல்லாம்
ஈர் அடியால் - இரண்டடியாலே
முடித்துக் கொண்ட முக்கியமும் அவை - ஆக்ரமித்துக்கொண்ட தனி வீரமுமாகிய அவற்றைக்குறித்து

விளக்க உரை

- (அடியை மூன்றை) மாவலி பக்கலிலே மாணுருவாய்ச்சென்று மூவடிநிலம் இரந்தபடியும், அந்நிலையில்நின்றே இரண்டியாலே மூவுலகையும் அகப்படுத்திக் கொண்டு நீ நினைத்தகாரியத்தை முடித்துக்கெக்ணட அதிசயமும் ஆகியவிவற்றைச் சொல்லக் கேட்குந்தோறும் என்னுடைய நெஞ்சு கரைந்து உருகின்றதே!; உன்னையநுஸத்தித்தால் இங்ஙனே சிதிலனாகும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் தரித்து நின்று உன்னையறுபவிப்பது என்றைக்கோ?

English Translation

Whenever I hear of how you begged for three strides of land then grew and took the Earth and sky and ocean in two strides and how you achieved your ends, my heart melts for you alone. O This wicked karmic self, when will I ever join you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்