விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம்*  ஏந்துகையன்* 
    உள்ளவிடம்வினவில்*  உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்*
    வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித்*  தேர்மிசைமுன்புநின்று* 
    கள்ளப்படைத்துணையாகிப்*  பாரதம்கைசெய்யக்கண்டார்உளர். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சங்கு - ஸ்ரீபாஞ்சஜந்த்தையும்
வெம் சுடர் - தீக்ஷ்ணமான ஜ்யோதிஸ்ஸையுடைய
திருசக்கர் - திருவாழியாழ்வாளையும்
எந்துகையன் - தரியாநின்றுள்ள திருக்கைகளையுடைய எம்பெருமான்
உள்ள இடம் - எழுத்தருளியிருக்குமிடத்தை

விளக்க உரை

திருவாழி திருச்சங்குங் கையுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடத்தைத் தேடுகின்றமை முன்னடிகளில் தோன்றும். (வெள்ளை இத்யாதி.) துஷ்டர்களை யெல்லாம் ஸம்ஹரித்துப் பூமியின் சுமையைப் போக்குதற்பொருட்டுத் திருவவதரித்த கண்ணபிரான் அதற்கு உபயோகமாகப் பாண்டவர்க்குத் துணைநின்று பலபடியாக உதவிப் பாரதயுத்தத்தை ஆதியோந்தமாக நடத்தி முடிந்தமை, மஹாபாரதத்தில் விரியும். சூதுபோரில் இழந்த ராஜ்யத்தை மீளவும் மோதுபோர்செய்து பெறுவதில் தர்மபுத்திரனுக்கு உபேக்ஷையுண்டான பொழுதெல்லாம் அங்ஙனம் வெறுப்புக் கொள்ளாத வண்ணம் பலவாறு போதித்துப் போர் தொடங்கும்படி தூண்டியும், பின்பு போர்த் தொடக்கத்தில் “உற்றாரையெல்லாம் முடன்கொன் றரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்” என்று சொல்லிப் பேரொழிந்த அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து அவனைப் போர்புரிய உடன்படுத்தியும் கண்ணபிரானே பாரதப்போரை மூட்டியவனாதல் காண்க. கள்ளப்படைத் துணையாகி- படைக்குக் கள்ளத் துணையாகி; அதாவது- தான் ஸேனைக்குத் துணையாகிறபோது இரண்டு தலைக்கும் பொதுத்துணையாயிருக்கையன்றியே, பகலை இரவாக்கியும், ‘ஆயுதமெடுப்பதில்லை’ என்று சொல்லிவைத்து ஆயுதமெடுத்தும், எதிரியுடைய உயிர்நிலையைக்காட்டிக் கொடுத்தும் போந்தமையாம். இவற்றுள் அமுதல்க்ருத்ரிமம் மேலிற்பாட்டிற் கூறப்படும். (குரக்கு வெல் கொடி) பெருமாளுக்குப் பெரிய திருவடி த்வஜமானதுபோல, அர்ஜுனனுக்குச் சிறிய திருவடித்வஜமாயினன் என்க.

English Translation

Are you a search of the abode of the Lord who bears the white conch and the fierce radiant discus? Come, I shall offer a small clue. There are many who saw him on a chariot driven by white horses bearing the Hanuman banner, stealthily guiding the army in the Bharat war.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்