விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரு உருவு கிடந்த ஆறும்*  கொப்பூழ்ச் செந்தாமரைமேல்*  திசைமுகன்- 
    கருவுள் வீற்றிருந்து*  படைத்திட்ட கருமங்களும்* 
    பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்*  என் நெஞ்சம் நின்று நெக்கு* 
    அருவி சோரும் கண்ணீர்*  என் செய்கேன் அடியேனே!*     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரு உருவு கிடந்த ஆறும் - அழகிய திருமேனிகள் வளர்த்தருளின படியும்
கொப்பூழ்செம் தாமரை மேல் - திருநாபிக் கமலத்திலே
திசைமுகன் கரு உன் - நான்மகனாகிற கருவுக்குள்ளே
வீற்றிருந்து - அந்தராத்மாவாக எழுந்தருளியிருந்து
படைத்திட்ட கருமங்களும் - ஸ்ருஷ்டித்த வியாபாரங்களுமாகிற

விளக்க உரை

(திருவுருவு.) காரணமான ஏகார்ணவஜலத்திலே அழகிய திருமேனியோடே கண்வளர்ந்தருளினது ஸ்ருஷ்டிக்காக. பிறகு அந்தத் திருமேனியில் திருநாபிக் கமலத்திலுண்டான நான்முகனை அதிஷ்டித்து நின்று ஸத்வாரகமாக ஸகலக்ருஷ்டியும் செய்தபடி. இப்படிப்பட்ட விலக்ஷணகுண சேஷ்டிதங்களைக் கேட்குந்தோறும் என்னெஞ்சம் நெகிழ்ந்து நின்று கண்ணீர் அருவிபோலே சோராநின்றது; இதனால் ஒன்றும் ஒழுங்குபட நினைக்க முடியவில்லையே! என்றாராயிற்று.

English Translation

Whenever I hear about your beautiful reclining form, about the red lotus-navel with Brahma seated on it, about your entering the wombs in your great acts of creation, and your peerless domain over all, my heart melts and tears food my eyes. O what can I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்