விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்ற ஆறும் இருந்த ஆறும்/*  கிடந்த ஆறும் நினைப்பு அரியன* 
    ஒன்று அலா உருவு ஆய்*  அருவு ஆய நின் மாயங்கள்* 
    நின்று நின்று நினைக்கின்றேன்*  உன்னை எங்ஙனம் நினைகிற்பன்*  பாவியேற்கு- 
    ஒன்று நன்கு உரையாய்*  உலகம் உண்ட ஒண் சுடரே!*      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும் - ஆங்காங்கு நிற்கிறபடிகளும் வீற்றிருக்கிற படிகளும் சயனித்திருக்கிறபடிகளும்
நினைப்பு அரியன - நெஞ்சாலும் நினைக்க முடியாதவையாயிருக்கின்றன
ஒன்று அவர் உரு ஆய் -(இங்ஙனே) பலபடியாய்
அரு ஆய் - எனக்கு அநுபவிக்கைக்கு உருத்தெரியாத
நின் மாயங்கள் - உனது அற்புதச் செயல்களை

விளக்க உரை

(நின்றவாறும்.) நின்றது மிருந்ததும் கிடந்ததும் இன்ன இன்னவிடங்களிலேயென்று வகுத்துக்கூறாமையாலே ஆசாரியர்கள் பலபடியும் ஈடுபட்டு நிர்வஹிப்பார்கள். நின்றவாறும் = லங்காத்வாரத்திலே கையும் வில்லுமாய் நின்றவாறு; வாலிவதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியால் இருந்தவாறும் = திருச்சித்ரகூடம் முதலான விடங்களில் பர்ஸசாலைகளில் வீற்றிருந்தவாறு . கிடந்தவாறும் கடற்கரையிலே கிடந்த கிடை, ஆக மூன்றுபடிகளும் ராமாவாதாரத்திலே அநுபவித்தபடி, இனி, க்ருஷ்ணாவதாரத்திலே அநுபவித்தபடியாகவுமாம்; - கோவர்த்தன மென்னுங் கொற்றக்குடையை யெடுத்து ஏந்திநின்ற நிலை; ராஸ்க்ரீடைக்கு முன்பாகப் பெண்களோடே கழகமிருந்தவிருப்பு; ஓரொருத்தல் மடிகளிலே சாய்ந்தபடி அன்றிக்கே, நிற்பதுமோர் வெற்பகத்திருப்ப விண் கிடப்பதும் நற்பெருந் திரைக்கடலுள் என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தின்படியே திருமலையிலே நின்றபடியும், பரமபதத்திலே இருந்தபடியும், திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளினபடியும் கொள்வர். அன்றிக்கே நின்றதெந்தையூராகத் திருந்ததெந்தை பாடநத்து, அன்று வெஃகனைக்கிடந்தது என்கிறபடியே வச்சிப்பதியில் ஊரகத்தில் நின்று, பாடகத்தில் இருந்து வெங்காலில் கிடந்தபடியுமாம். புளிக்குடிக்கிடந்து கரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் கிடந்துள்நின்று என்றபடியேயாகவுமாம். அன்றிக்கே, நின்று மிருந்துங் கிடத்தும்... என்கொஞ்ச அதனால் என்று இவ்வாழ்வார் தாமே பெரிய திருவந்தாதியில் அருளிச்செய்தபடியே இவைமூன்றும் இவருடைய திருவுள்ளத்திலேயாகவுமாம்.

English Translation

Countless are your visible and invisible wondrous deeds! O Lord, in standing, in sitting, and in reclining postures I think and think, yet cannot ever comprehend you. O Radiant one who swallowed the Earth, show this sinner a way.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்